நம்மிடமிருந்து கிருமித்தொற்று மற்றவருக்கு பரவாமல் இருக்க ஒரு மிகச்சிறந்த வழிமுறை
இந்த ஒழுங்கு முறையை நாம் பயிற்சி செய்ய ஒரு மிகச்சிறந்த தருணம் உள்ளது எனில் அது இத்தருணம் ஆகும்.
இந்த கொரோனா தொற்று காலத்தில் ஒரு சாதாரண மனிதரையும் தனது பொருமையை இழந்து பதற்றமடையச்செய்யும் ஒரு விஷயம் உள்ளது என்றால் அது இருமல் மற்றும் காய்ச்சலே ஆகும்.
சாதாரணமான இருமல் மற்றும் காய்ச்சல் கூட கொரோனவாக இருக்குமோ என்ற அச்சம் நம்மை ஆட்டிப்படைக்கவே செய்கிறது. அதை விட மோசமான ஒரு விஷயம் நம்மை சுற்றியுள்ளோர் நம்மை எதிர் நோக்கும் விதம்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் சிலர் தாம் எதிர் கொள்ளும் இருமல் தும்மல் காய்ச்சல் போன்றவற்றை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் எதிர்கொள்வதும் அதனை பிறருக்கு பரவா வண்ணம் தடுக்கும் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பதும் நடந்து கொண்டுதான் உள்ளது.
அவ்வாறு நாம் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பின் பொது இடங்களில் செய்ய வேண்டியது என்ன?
பொது இடங்களில் நாம் இருமும் போதும் தும்மும் போதும் குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவோம் அது அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டதாகும் நம் நலன் உட்பட.
நீங்கள் முகக்கவசத்தை அணியாத பட்சத்தில் ஒவ்வொரு முறை இருமும் போதும் தும்மும் போதும் கீழ்கண்ட ஒழுங்கு முறைகளை கடைபிடிப்பது அவசியம்
- உங்கள் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளவும்.
- கைக்குட்டை இல்லாத பட்ச்சத்தில் முழங்கையால் உங்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும்.
- உங்கள் முகத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் நபர்களிடமிருந்து விளக்கிக்கொள்ளவும்.
- இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கையை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
நீங்கள் இருமும் போதும் தும்மும் போதும் கிருமிகளை காற்றில் பறக்க விடுகிறீர்கள். இது உங்களுக்கு நேரெதிரே 3 முதல் 6 அடி வரை உள்ள நபரை பாதிக்கும்
நீங்கள் கைகளில் இருமும்போது கிருமியானது நீங்கள் கைகளை வைக்கும் அனைத்து இடங்களிலும் பரவுகிறது.
மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமியானது நம் கைகளின் மூலமாக பிற இடங்களுக்கும் அங்கிருந்து மற்றவருக்கும் பரவுகிறது.
நீங்கள் நோய்வாய் பட்டிருக்கும் பொது செய்ய வேண்டிய வழிமுறை.
- கைகளை அடிக்கடி கழுவவும்.
- கைகளால் கண், காது, வாய், மூக்கை தொடாதீர்கள். தொட்டால் உடனடியாக கைகளை கழுவவும்.
- நீங்கள் கைகள் வைத்த பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
- உங்களை சுற்றியுள்ள ஆரோக்கியமான நபரிடமிருந்து விலகியே இருங்கள் குறிப்பாக இருதய நோய் நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து.