கொரோனா தொற்று பரவல் பற்றி நாம் அறிந்த (அறியாத) தகவல்கள் குறித்து மருத்துவ நிபுணர்களின் விளக்கம்
இந்த கொரோனா தொற்று காலத்தில் நீங்கள் அதிகப்படியாக ஆன்லைனில் உணவுகளை மற்றும் பிற பொருட்களை ஆர்டர் செய்து வாங்குபவர் எனில் உங்களுக்கு அடிக்கடி இந்த சந்தேகங்கள் எழுந்து இருக்கலாம். உணவுகளையும் பொருட்களையும் டெலிவரி செய்ய வரும் நபருக்கு கொரோனா தொற்று இருந்திருந்தால் என்ன செய்வது.
ஆரோக்கியமான ஒரு நபர் நோய் தொற்று கொண்ட நபருடன் நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது இருமல் அல்லது தும்மல் மூலமாக நோய் தொற் தொற்றானது
பரவும் அதேசமயம் ஏதாவது வைரஸ் கிருமி உள்ள பொருளை தொடும் பட்சத்தில் அதிலிருந்தும் வைரஸ் கிருமியானது அந்த நபரின் கைகள் மூலம் முகத்தை தொடுவதினால் தொற்று ஏற்படும். இதற்கு போதுமான ஆராய்ச்சிகள் இல்லாதபோதும் அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று நம்பப்படுகிறது.
எனவே நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
நாவல் கொரோனவைரஸ் ஒரு பொருளின் மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் என்பதை அறிந்தால் அவற்றின் பாதிப்பை குறைக்க முயற்சி செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அறிக்கையை வெளியிடாத ஒரு ஆராய்ச்சி அமைப்பானது 2019 நாவல் கரோனா வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைன்லஸ் ஸ்டீல் போன்ற பொருட்களின் மேற்பரப்பில் சுமார் 2 முதல் 3 மணி நேரங்கள் வரை உயிர்வாழும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு உங்கள் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வது சிறந்தது மற்றும் உங்கள் வீட்டில் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளான கதவின் கைப்பிடி மேஜை நாற்காலி மற்றும் மின்சாதன பொருட்களின் பொத்தான்களை தினமும் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.
உலக சுகாதார அமைப்பானது வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.
மேற்பரப்பு தூசி படிந்து வெளிப்படையாக தெரியும் பட்சத்தில் அதை முதலில் சோப்பு நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.
ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை பயன்படுத்தவும்
நீங்கள் தூய்மை செய்யும் பகுதி காற்றோட்டம் கொண்டதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்
நீர்த்த பிளீச்சிங் சொல்யூஷன் அல்லது 70 சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட சொல்யூஷன் பயன்படுத்தி மேற்பரப்பை சுத்தம் செய்யவும்.
பயன்படுத்தும் சொல்யூஷன் காலாவதி ஆகாமல் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளவும்
சுத்தம் செய்து முடித்த பின் கைகளை நன்றாக சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
நாம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் மூலம் கொரோனா தொற்று பரவுமா?
நாம் முன்பே கூறியது போல் கொரோனா தொற்று காகித அட்டையின் மேற்பரப்பில் இரண்டு நாட்கள் வரை உயிர்வாழும் எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்கும் பொருட்களை இரண்டு நாட்களுக்கு யாரும் தொடாத வண்ணம் ஒரு தனி இடத்தில் வைத்து இரண்டு நாட்கள் கழித்து அந்த பொருட்களை பிரித்து பயன்படுத்துவது சிறந்தது அல்லது உடனடியாக அந்த பொருட்களை பயன்படுத்த அட்டைப்பெட்டியை கைகள் படாமல் அப்புறப்படுத்தி உள்ளிருக்கும் பொருட்களை பத்திரமாக எடுத்து பயன்படுத்துவது சிறந்தது.
எனது ஆன்லைன் உணவு பாதுகாப்பானதா?
உணவகங்களில் வாங்கி உண்ணும் உணவு பாதுகாப்பானதா அல்லது அதன் மூலம் நோய் வருமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கும். கொரோனா தொற்று நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துமே தவிர செரிமான அமைப்பை பாதிக்காது. இதற்கு அர்த்தம் கொரோனா தொற்று உணவுகளின் மூலம் பரவும் என்று ஆதாரம் இல்லை என்பதே.
இருப்பினும் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களுக்கும் சில நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்மூலம் உணவுகளை தயாரிப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் உணவுகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் தயாரிக்கப்பட்ட உணவுகளை எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் போன்றவற்றை சில நெறிமுறைகள் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
நீரின் மூலம் கொரோனா தொற்று பரவுமா?
கொரோனா வைரஸானது குடிக்கும் நீர் மூலமாகவோ அல்லது பிற செயல்களுக்கு பயன்படுத்தும் நீர் மூலமோ பரவும் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
கொரோனா வைரஸ் எனது ஆடைகளில் உயிர் வாழுமா?
இதற்காக பிரத்யேகமாக ஆராய்ச்சிகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை ஆனால் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும்போது உங்கள் ஆடைகளை மாற்றி குளித்து விட்டு சுத்தம் செய்வது மிகவும் சிறந்தது.
கொரோனா வைரஸ் எனது சருமத்தில் உயிர் வாழுமா?
கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாகங்களில் உயிர்வாழும் அவற்றில் மிக முக்கியமானது கைகள். கைகள்தான் வைரஸ் கிருமித் தொற்று பரவுவதற்கு மிக முக்கியமான காரணமாகும் காரணம் கைகளால் முகத்தையும் வாயையும் கண்களையும் அடிக்கடி தொடுவதே எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்தது
Plastic and steel la 2-3 hours than irukuma corona virus?but paper la 2days irukuma?