நோய்தொற்று நிபுணரிடமிருந்து ஒரு சுருக்கமான விளக்கம்
ஏசி இயங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் இருப்பதனால் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்று கூறுவது உண்மையா?
இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது ஆனால் இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மையான காரணம் இல்லை என்று கூற இயலும்
சில நாட்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ஒரு சம்பவம் ஒரு உணவகத்தில் 10 நபருக்கு ஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது என்று அறிக்கை வெளியானது ஆனால் அந்த உணவகத்தில் அவர்களை தவிர்த்து இருந்த பலருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்கிற தகவலும் பல கேள்விகளை எழுப்பியது.
உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனினும் விசிறி மற்றும் ஏசி அறையில் உள்ள காற்றை அனைத்து இடங்களுக்கும் படரச் செய்யும் என்பதால் அவை வைரஸ்களை பரவச் செய்யும் அபாயம் உள்ளது என நம்பப்படுகிறது.
எனினும் இது சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளும் அறிக்கைகளும் நமக்கு உறுதியான தகவலை அறிய தேவைப்படுகிறது.
வைரஸ் பரவுவதற்கு மிகவும் முக்கிய காரணமாக கருதப்படுவது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக நெருங்கிய தொடர்பில் உள்ளதே எனவே சமுதாய இடைவெளி கடைபிடித்து இருமும்போதும் தும்மும்போதும் அட்டைகளைப் பயன்படுத்துவது கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுவது முகக்கவசம் அணிவது போன்ற செயல்களே தற்போதைக்கு மிகவும் முக்கியமானதாகும்