Eye

இந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

இந்த கொரோனா தொற்று காலத்தில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? நீங்கள் வெளியே சென்று விட்டு திரும்பும்போது அவைகளை கைகளால் தொடலாமா?

நாம் அறிந்தவரை இந்த காலகட்டத்தில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பயன்படுத்தும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படுத்தும் என்று கூற இயலாது. ஆனால் சுத்தம் மற்றும் சரியான முறையில் காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்துவது இப்பொழுது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் முக்கியமானது.

கோவிட்-19 உருவாக்கும் கொரோனா வைரசானது கண், வாய், மற்றும் மற்றும் மூக்கு மூலம் நம் உடலில் செல்லும் என்பதை நாம் அறிந்ததே. எனவே உங்களது கைகளில் கிருமி இருக்கும்பட்சத்தில் உங்கள் கைகளால் நீங்கள் கண்களைத் தொடும் பொழுது நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் மேலும் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தங்களது கைகளால் அடிக்கடி கண்களை தொடுவார்கள் என்கிற உண்மையை மறுக்க முடியாது. எனவே அதுவே நாம் அச்சப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்

கான்டாக்ட் லென்சை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் காண்டாக்ட் லென்ஸ் அணியும் போதும் காண்டாக்ட் லென்ஸை வெளியே எடுக்கும் போதும் அல்லது அதனை கையாளும் ஒவ்வொரு முறையும் நமது கைகளை நன்றாக சோப்பு கொண்டு கழுவி உலரவைத்த பின்பே செய்ய வேண்டும். என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்

உங்களது மருத்துவர் மற்றும் காண்டாக்ட் லென்ஸ் உற்பத்தியாளர் பரிந்துரையின்படி கான்டாக்ட் லென்சை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் கையாள வேண்டும்

உங்களால் உங்களது கண்களை தொடாமல் இருக்க முடியாத பட்சத்தில் நீங்கள் கண்ணாடிக்கு மாறுவது சிறந்தது

கண்ணாடியினால் முகத்தையும் கண்களையும் தொடுவதை குறைவு ஆனால் கண்ணாடி கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் என்று எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் நீங்கள் இருமல் அல்லது காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பின் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்

கான்டாக்ட் லென்சை பயன்படுத்துவதால் கொரோனா அல்லாத பிற வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது அவை உங்களது பார்வையைகூட நிரந்தரமாக பரிக்கக்கூடும். தவறாக காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்துவதால் அதற்கான சாத்தியக்கூறு அதிகம்

எனவே கீழ்கண்டவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் அவசியம்

1. அடுத்தவருடைய கான்டாக்ட் லென்சை அணிதல்

2. கான்டாக்ட் லென்ஸ் உடன் உறங்குதல்

3. ஆயுட் காலம் முடிந்த கான்டாக்ட் லென்சை பயன்படுத்துதல்.

4. சாதாரண நீரில் பராமரித்தல்

One comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: