Stress

வண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை!

வண்ணமிடுதல் உங்களுக்கு உள்ளிருக்கும் கலைத்திறனை வெளிக்கொண்டுவருகிறது. மேலும் மன அழுத்தத்தை போக்கி மன நிறைவையும் மன அமைதியையும் கொடுக்கிறது.

குழந்தைகளே பெரும்பாலும் செய்யும் செயல் எவ்வாறு வயதானவர்களுக்கு பயன் தரும்?

குழந்தைகள் வண்ணம் இடுவதற்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் வயதானவர்கள் வண்ணமிட சாதாரண கவனம் போதுமானது.

இது உள்ளிருக்கும் நம்மை வெளியே கொண்டு வரும் மற்ற செயல்களான புல் வெட்டுதல் தோட்டத்திற்கு நீர் பாய்தல் வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்தல் போன்ற செயல்களை போன்றதே ஆகும்.

வண்ணமிடுதல் எவ்வாறு வயதானவர்களுக்கு மனநிறைவைத் தரும்?

மருத்துவர்கள் மூன்று காரணங்களால் வண்ணமிடுதல் வயதானவர்களுக்கு மனநிறைவைத் தருவதோடு மன அழுத்தத்தை போக்குவதாக கூறுகின்றனர்

1. வண்ணமிடுதல் உங்கள் கவனத்தை உங்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது அவை முழுக்க முழுக்க வண்ணமிடுதலையே சுற்றி வட்டமிடுகிறது இதனால் மன அழுத்தத்தை உருவாக்கும் எந்த ஒரு செயல் அல்லது எண்ணம் மீதும் உங்களது கவனம் செல்லாமல் மன அழுத்தம் குறைகிறது.

2. எப்பொழுது கவனமானது இந்த எளிய கலையில் முழுமையாக ஈடுபடுகிறததோ அப்பொழுது உங்கள் மூளையானது அமைதியடைகிறது இதனால் உங்களுடைய சுய சிந்தனைகள் மற்றும் சுய மதிப்பீட்டல் போன்ற எந்த ஒரு செயலும் உங்கள் புரிதலால் உங்களை பாதிக்காது.

3. வண்ணமிடுதலுக்கு தேவையான குறைவான பங்களிப்பு உங்களை மிக மகிழ்ச்சிகரமாக மாற்றும். வண்ணங்களை வெளிப்புற கோடுகளாகவோ அல்லது உட்புற வண்ணங்களாகவோ இடுங்கள் அது எதுவாயினும் நீங்கள் எதிர்பாராத ஒன்றாகும் அது மிகவும் அழகாகவோ அல்லது அழகு இல்லாமலோ இருக்கலாம் ஆனால் அது உங்களுடையது உங்கள் கலைத்திறனை ஊக்குவித்து உங்களுக்கு மனநிறைவை தந்து மனஅழுத்தத்தை உங்கள் எளிய பங்களிப்பால் போக்கவல்லது.

ஏன் வண்ணமிடுதல் சிலருக்கு பயனுள்ளதாக அமைவதில்லை?

வண்ணமிடுதல் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையாது காரணம் நீங்கள் உங்களுடைய முழு மனதுடன் செய்யாத எந்த ஒரு செயலும் முழுமையான பலனை அளிக்காது. ஒருவேளை நீங்கள் குழந்தையை போன்று வண்ணமிடுதலை விரும்பி செய்வீர்களாயின் குழந்தையை போன்று முழு பயனை அடைவீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: