News

காவேரி மருத்துவமனை கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றி சாதனை

காவேரி மருத்துவமனை கண்டோன்மெண்ட் பிரிவில் இயங்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வருடத்தில் உடல் எடை குறைவான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை வெற்றிகரமாக காப்பாற்றி சாதனை செய்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் காவேரி மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் வெற்றி விகிதத்தில் இது 97 சதவீதம் ஆகும்.

இந்த 1000 குழந்தைகளில் 600 க்கும் மேற்பட்ட குழந்தைகள் செயற்கை சுவாசம் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர் மற்றும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரு கிலோவிற்கு குறைவான உடல் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கொண்டாடும் விதமாக ஆயிரம் குழந்தைகளை காப்பாற்ற உறுதுணையாக உழைத்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர் செங்குட்டுவன் காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் பேசுகையில் ஒவ்வொரு குழந்தையை காப்பாற்றுவதும் மிகவும் சவாலான விஷயமாகும், அவ்வாறு காப்பாற்றப்பட்ட குழந்தைகளை காணும்போது மனம் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறது. இத்தகைய உலகத்தரமான சிகிச்சையை நமது திருச்சி மாநகரில் வழங்க உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து டாக்டர் சுரேஷ் செல்லையா மூத்த குழந்தைகள் சிகிச்சை நிபுணர் மற்றும் கல்வித்துறை தலைவர் பேசுகையில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடுவது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும் என்று வலியுறுத்தினார். மேலும் திருச்சியில் NNF மற்றும் NBE மூலம் அங்கீகரிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான DNB படிப்பை கொண்ட ஒரே மருத்துவமனை காவேரி மருத்துவமனை என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து டாக்டர் கே செந்தில் குமார் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் பேசுகையில் இந்த தருணம் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற உறுதுணையாக இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பெருமை கொள்ளும் தருணமாகும். நாம் தொடர்ந்து இதே போல் ஒவ்வொரு குழந்தைகளையும் பாதுகாப்புடன் காப்பாற்ற உருதுணையாக இருப்போம் என்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுவோம் என்று கூறுகையில் குழந்தைகளுக்கான சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் விக்னேஷ், டாக்டர் மேகநாதன் டாக்டர் நரேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: