கேள்வி: நான் மலம் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு நேரம் மலம் கழிக்க எடுத்துக்கொள்ளலாம்?
பதில்: நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் அலைபேசி மற்றும் செய்தித்தாள்களை கழிவறைக்கு எடுத்து செல்வதை தவிர்த்தல் ஆகும்.
நீங்கள் கழிவறைக்கு செல்லும் ஒரே காரணம் உங்கள் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மட்டுமே. உங்கள் உணவில் அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் தேவையான அளவு நீர் பருகுதல் நீங்கள் மலம் கழிக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும். தோராயமாக 5 நிமிடம் என்பது மலம் கழிக்க போதுமான நேரம் ஆகும்.
நீங்கள் மலம் கழிக்கும் நேரம் தொடர்ந்து அதிகமாக இருக்குமேயானால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.