Skip to content

5 எளிய வழிகள் மூலத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள

பெரும்பாலானோர் வெளியில் சொல்ல சங்கடப்படும் ஒரு பிரச்சனை தான் மூலம் ( Hemorrhoids) அதன் மூலம் ஏற்படும் எரிச்சலும் வேதனையும் சொல்லால் விவரிக்க இயலாது.

அவ்வாறான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க Dr. அறிவரசன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணர் கூறும் வழிகள்.

வரும் போது செல்​லுதல்

பெரும்பாலானோர் சரியான நேரங்களில், அதாவது மலம் வரும்போது செல்வதை தவிர்க்கின்றனர், தங்கள் அன்றாட வேலை பழுவின் காரணமாக மலம் கழிக்கும் நேரத்தை ( அதாவது தமது உடல் கழிவுகளை வெளியேற்ற தயாராக இருக்கும் நேரம்) புறக்கணித்து விட்டு தாமதமாக செல்கின்றனர். இதனால் மலமானது இறுகி கடினமாகிவிடும். இதனால் மலம் கழிக்கும் போது மலம் வெளியேறும் பாதை பாதித்து மூலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கழிவறையை படிக்கும் அறையாக மாற்றாதீர்கள்.

கழிவறையில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவதாக எண்ணி சிலர் கழிவறைகள் செய்தித்தாள்களை வாசிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் மலம் கழிக்கும் நேரமானது அதிகமாகி மூலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உணவை மறுமதிப்பீடு செய்யுங்கள்.

உங்கள் உணவு முறையை மறுமதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அதிகப்படியான நார் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் தேவையான அளவு நீர் அருந்துதல் உங்கள் உடலை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். இது எளிதாக மலம் கழிக்க வகை செய்யும். நார்ச்சத்து குறைபாடு என்பது மூலம் உண்டாவதற்கான முக்கிய காரணி ஆகும்.

நகர பழகுங்கள்.

எந்திர மயமான வாழ்க்கையில் பெரும்பாலானோர் தான் அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். இதுவும் மூலம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். எனவே குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் இடத்தை விட்டு எழுந்து சிறிது தூரம் நடந்து மீண்டும் அமர்ந்து வேலை செய்யுங்கள்.

மருத்துவரை அணுகவும்.

ஒருவேளை நீங்கள் மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ அல்லது மலம் கழிப்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: