Skip to content

வெரிகோஸ் வெய்ன் (நரம்பு முடிச்சு) பற்றி நீங்கள் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்.

கால்களை குறுக்காக போட்டு அமர்வதால் வெரிகோஸ் வெய்ன் உண்டாகும்.

கால்களை குறுக்காக போட்டு அமர்வதால் நரம்பு முடிச்சு உண்டாகாது. மேலும் இறுக்கமான ஆடைகளை அணிவதாலும் நரம்பு முடிச்சு உண்டாகாது. மாறாக இது ஏற்கனவே நரம்பு முடிச்சு உள்ளவர்களுக்கு வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.

கர்பம் தரிப்பதால் நரம்பு முடிச்சு ஏற்படும்.

கர்ப்பம் தரிப்பவர்களுக்கு நரம்பு முடிச்சு மேலும் எரிச்சலை ஏற்படுத்தும். கர்ப்பம் தரிப்பதால் நரம்பு முடிச்சு உருவாவதற்கான வாய்ப்பு மிக குறைவு.

குடும்பத்தில் யாருக்கேனும் நரம்பு முடிச்சு இருந்தால்.

குடும்பத்தில் யாருக்கேனும் நரம்பு முடிச்சு இருப்பதால் மட்டும் நரம்பு முடிச்சு உண்டாகும் என்று கூற முடியாது. குடும்பத்தில் யாருக்கேனும் நரம்பு முடிச்சு இருப்பதால் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு 50% க்கும் குறைவாகவே உள்ளது.

மசாஜ் செய்வதால் நரம்பு முடிச்சு குணமாகும்.

மசாஜ் செய்வது நரம்பு முடிச்சில் உள்ள வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் ஆனால் குணப்படுத்தாது. லேசர் சிகிச்சை மூலம் நரம்பு முடிச்சுகளை முழுவதுமாக நீக்க முடியும்.

பச்சை குத்துவதால் நரம்பு முடிச்சு அதிகமாகும்.

பச்சை குத்துவதற்கும் நரம்பு முடிச்சிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: