Skip to content

எப்பொழுது உங்கள் குழந்தைக்கு முட்டை, நிலக்கடலை, மீன் போன்ற திட உணவுப்பொருட்களை கொடுக்கலாம்.

ஒருவயது பூர்த்தி அடையும் தருணம் குழந்தைகள் பெரும்பாலும் உணவு ஒவ்வாமையை வெளிப்படுத்தும் காலம் ஆகும்.

அதற்காக குழந்தை நன்கு வளர்ந்த பிறகு மீன்,முட்டை, கடலை போன்ற திட உணவுப்பொருட்களை கொடுப்பது சிறந்தது என்று கூற இயலாது. சொல்லப்போனால் ஒருவயது குழந்தைக்கு மீன் முட்டை கடலை போன்ற திட உணவுப்பொருட்களை கொடுப்பது அவர்களை உணவு ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கும்.

 

உங்கள் குழந்தையின் மருத்துவருடன் கலந்தாலோசித்து குழந்தைக்கு தேவையான உணவு முறையை பின்பற்றுங்கள். உணவு ஒவ்வாமை இல்லாத குழந்தைகள் பெரும்பாலும் எந்த பிரச்சனையும் இன்றி திட உணவுப்பொருட்களை  உட்கொள்ளும்.

 

குடும்பத்தில் யாருக்கேனும் உணவு ஒவ்வாமை இருப்பின் உங்கள் குழந்தைநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே திட உணவுப்பொருட்களை வழங்குவது சிறந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: