Skip to content

உங்கள் அன்பானவர்கள் மாரடைப்பிற்கு பின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை.

​உங்கள் அன்பிற்குரியவர்கள் மாரடைப்பிற்கு பிறகு வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு அமர்ந்து வெளியில் மறுக்கின்றார்களா? மாரடைப்பு ஏற்பட்டு சில மாதங்களுக்கு இவ்வாறே தொடர்ந்து அவர்கள் இருப்பார்களேயானால், அவருக்கு இரண்டாவது மாரடைப்பு வராமல் தடுக்க நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டும்.

 

உங்கள் அன்பிற்குரியவர்கள் வெளியில் செல்ல மறுக்கலாம் அதற்கு நீங்கள் சரி என்று இசைந்து கொடுக்கலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு இனி செய்யக்கூடாது. மாறாக அவர்களை வெளியில் செல்ல ஊக்குவிக்க வேண்டும்.

 

மாரடைப்பு ஏற்பட்ட நபர் வெளியில் சென்று அன்றாட பணியிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதால் அவருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவரின் அன்றாட வாழ்வு மேம்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

மேலும் ​அவர்கள் வெளியில் செல்வதை விரும்புவதும் இல்லை. மாரடைப்பு ஏற்பட்ட பிறகு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது தொடர்ந்து உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது நீங்கள் உங்கள் இருதயத்திற்கு எதிராக செய்யும் மிக மோசமான விஷயமாகும்.

 

எனவே உங்கள் அன்பிற்கு உரியவர்கள் உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள் அவர்கள் இருதயத்திற்கு ஆரோக்கியம் இல்லாத junk ஜங்க் உணவுகளை விரும்பினால் அவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்காக வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: