Skip to content

ஜாக்கிரதை சைலெண்ட் ஹார்ட் அட்டாக்

பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது பொதுவான அறிகுறிகளான நெஞ்சு பாரம், அல்லது வலி, உடல் குளிர்ந்து வியர்த்தல் மற்றும் அதீத பலவீனம் போன்றவற்றையே காண்கின்றனர். ஆனால் 20 முதல் 30 சதவீத மக்கள் அசாதாரண அறிகுறிகளையோ அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமலும் மாரடைப்பை எதிர் கொள்கின்றனர் என்ற அதிர்ச்சிகாரமான தகவலை கூறுகிறார் காவேரி ஹார்ட்சிட்டியின் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணரும், செயல் இயக்குனருமான Dr. T. செந்தில்குமார் அவர்கள். இந்த அசாதாரண அறிகுறிகள் பொதுவாக நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படுவதாகவும். நீரிழிவு நோய் கொண்ட யாருக்கு வேண்டுமானாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம் எனவும் அவர் கூறினார்.

 

அசாதாரண அறிகுறிகள் என்றால் என்ன?

விவரிக்க இயலாத சோர்வு

மூச்சு திணறல்

தொண்டை, கழுத்து, தாடை போன்ற பகுதிகளில் அசௌகரியமாக உணர்தல்.

இன்னும் சிலர் நெஞ்சு எரிச்சலையே எதிர் கொண்டுள்ளனர். இது நெஞ்சு சார்ந்த பிரச்சனை என்று உணராமல் சாதாரணமான நெஞ்சு எரிச்சல் என்று கருதி அதற்கு ஆண்டாசிட் (அமில நீக்கி) மருந்தை எடுத்துக்கொண்ட சம்பவமும் இங்கு நடந்துள்ளது.

அதிகப்படியான மக்கள் மாரடைப்பின் போது மார்பின் இடது புறத்தில் ஒரு கூறிய வலியை உணர்வதாக Dr T செந்தில்குமார் அவர்கள் கூறினார். ஆனால் மாரடைப்பின் போது மார்பின் போது மார்பின் மையப்பகுதியில் அசௌகரியமாக உணர்வது பொதுவான பிரச்சினையாகும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: