Skip to content

இயற்கையான காய்கறிகள் சாப்பிடுவதால் புற்றுநோயின் பாதிப்பு குறையுமா?

இயற்கையான காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியம் என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்படும் ஒன்று.

ஆனால் முழுவதுமாக இயற்கையான காய்கறிகள் மட்டுமே உட்கொள்வதால் புற்றுநோயின் குறையுமா? இதை கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வில் ஏறத்தாழ 70,000 நபர்கள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவினர் அறவே இயற்கை காய்கறிகளை தவிர்த்தும், மற்றொரு பிரிவினர் அளவாக இயற்கை காய்கறிகளை உண்டும், இறுதி பிரிவினர் முழுவதுமாக அல்லது அதிகமாக இயற்கையான காய்கறிகளை மட்டுமே உண்டும் வந்தனர். இவர்கள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அறவே இயற்கை காய்கறிகளை தவிர்த்தவர்களை காட்டிலும், அளவாக இயற்கை காய்கறிகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோயினால்  ஏற்பட்ட பாதிப்பு கட்டுக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அளவாக இயற்கை காய்கறிகளை சாப்பிட்டவர்களை ஒப்பிடும் பொது அதிகமா இயற்கை காய்கறிகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோயினால் ஏற்பட்ட பாதிப்பு கட்டுக்குள் இருந்தது மட்டும் இல்லாமல் மேலும் வேறு வகையான புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் குறுய்வாகவே இருந்தது. குறிப்பாக ப்ரோஸ்டேட் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்க்கான மிகவும் குறைவாகவே இருந்தது.

முழுமையான இயற்கை காய்கறிகளை மட்டுமே உண்டு வருவதால் மட்டும் புற்றுநோயின் பாதிப்பிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூற இயலாது. ஆரோக்கியமான உணவு முறையோடு ஆரோக்கியமான வாழ்கை முறையுமே நம்மை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: