இது பெரும்பாலானோருக்கு ஏற்படும் பொதுவான ஒரு வினாவாகும்.
இதற்கு பதில் இதுவரை இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இது தொடர்பான சில விஷயங்களை தெரிந்து கொள்ள காவேரி ஹார்ட்சிட்டியின் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணரும், செயல் இயக்குனருமான Dr. T. செந்தில்குமார் அவர்களை தொடர்பு கொண்டபோது அவர் நமக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் இருதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் செலவிடப்படுகிறது. இந்த ஆராய்ச்சி CAD ( Coronary Artery Disease) எனப்படும் இரத்தகுழாய் தமனி, வால்வு நோய், மற்றும் பிற இருதய நோய்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிற ஆய்வை அடிப்படையாக கொண்டது. இருதய நோயானது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான முன்னணி நோயாகும்.
ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பண செலவீனங்களுக்கு பிறகும் ஏன் இருதய நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது ஒரு பொதுவான கேள்வி.
கேள்வி: இருதய நோயை குணப்படுத்துவதில் இருந்து எது நம்மை தடுக்கிறது.
பதில்: ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது இருதய தசையானது பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட தசையானது மீண்டும் வளராது.
இவ்வாறான மாரடைப்பை நாம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை தீவிரமாக கவனிப்பதன் மூலம் தடுக்க முடியும். ஆனால் ஒருவருக்கு மாரடைப்பு வந்த பிறகு இருதய தசைகளில் திசுக்கலானது இறந்துவிடும் இவைகள் மீண்டும் உற்பத்தியாகாது. ஒருமுறை இரத்த வால்வு இருகிவிட்டால் அவைகள் அவைகளின் நெகிழ்வு தன்மையை இழந்துவிடும். இந்த வால்வுகளை நாம் சரி செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.
கேள்வி: இருதய நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்.?
பதில்: இருதய நோயை நாம் முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்கிற போதிலும் நம்மால் அவற்றை சிறப்பாக கையாள இயலும்.
பெரும்பாலான இருதயம் சம்பந்தமான நோய்கள் இன்று குணப்படுத்தக்கூடியதாகவே உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது மற்றும் இரத்தக்கொழுப்பை குறைப்பதன் மூலம் இரத்த தமனி நோயை வராமல் தடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் இயலும் என்பது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்ட ஒன்று.
இருதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பை நீக்க முடியாத பட்சத்தில் வால்வை சற்று திறக்கச்செய்வதன் மூலம் நோயாளிகளை இருதய அடைப்பிலிருந்து காப்பாற்ற இயலும். பாதிக்கப்பட்ட வால்வுகளை நம்மால் சரி செய்யவோ அல்லது மாற்றவோ இயலும்.
இரத்த திசுக்களின் மூலம் இருதயத்தின் இயக்கம் தடைபடாமல் இருக்க மெக்கானிக்கல் கருவி மூலம் இருதயத்தை தொடர்ந்து இயக்கலாம். அல்லது இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
கேள்வி: இருதய நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: ஸ்டெம் செல்களின் மூலம் இருதய திசுக்களை மறு உற்பத்தி செய்யக்கூடிய ஆராய்ச்சிகள் இருதய நோய்களை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை கொடுக்கின்றன. ஆனால் என்னை பொறுத்தவரை நோய் வந்த பிறகு குணப்படுத்துவதை விட வருமுன் காப்பதே சிறந்ததாக கருதுகிறேன்.