மாரடைப்பு பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்.
கட்டுக்கதை: வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்..
உண்மை: இப்போது, அடிக்கடி, இளம் வயது மக்களுக்கு தான் மன அழுத்தத்தாலும், வாழ்க்கை முறையாலும் மாரடைப்பு வருகிறது , மேலும் பிற காரணங்களாலும் வரலாம்.
கட்டுக்கதை: வயதானவர்களுக்கு மாரடைப்பு வரும் காரணங்கள் இளைஞர்களுக்கு வரும் காரணங்களோடு வேறுபட்டவை.
உண்மை: சாதாரணமாகவே, இதயத்தமனி சம்மந்தமான நோய்கள் முதியவர்களுக்கு வரும் காரணங்கள் என்னவோ அதே தான் இளையவர்களுக்கு வருவதற்க்கான மேலும் சில காரணங்கள்.
- தமனிகளின் அசாதாரண நிலை
- உராய்தலில் குறைபாடுகள்
- தமனிகளில் வீக்கமோ,கட்டிகளோ இருத்தல்
- இதய அதிர்ச்சி
- இதய நோய்களின் குடும்ப வரலாறு
- புகைபிடித்தல்
- அதிக கொலஸ்ட்ரால்
- உயர் இரத்த கொதிப்பு
- உடற்பருமன்
- நீரிழிவு
- உடற்பயிற்சியின்மை
- அதிக மன அழுத்தம்
மாரடைப்பு வருவதை தவிர்க்கும் சில வழிகள்
சிறு அளவிலான வாழ்க்கை முறை மாற்றம் இளைஞர்களிடம் மாரடைப்பிற்கான சாத்தியத்தை குறைக்கிறது .
அவைகள் :-
- ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
சரிவிகித உணவினை உண்ணுதல் வேண்டும். அதில் கீழ்காண்பவை இருக்க வேண்டும் :-
- ப்ரோடீன்ஸ்
- வைட்டமின்கள்
- தாதுக்கள்
- கொழுப்பு
- கார்போஹைடிரேட்டுகள்
- இந்த அளவுகள் சரியாக இருத்தல் வேண்டும் :-
இந்த அளவீடுகள் எப்போதும் சாதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் :-
- கொலஸ்ட்ரால்
- நீரிழிவு
- உயர் இரத்த அழுத்தம்
- ட்ரைக்ளிசரைட்ஸ்
- முறையான, தினசரி உடற்பயிற்சி
இதில் அடங்கியவை
- ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள் :-
○ நடைப்பயிற்சி
○ நடையோட்டம்
○ நீச்சல் பயிற்சி
○ நடனம்
- வடிவமைப்பு வலிமை பயிற்சிகள் , உடலுக்கு உறுதி தருவதோடு இதயத்திற்கு ஏற்படும் சுமையையும் குறைக்கிறது
- தீய பழக்கங்களை கைவிடுதல்.
- மது அருந்துவதை நிறுத்துங்கள்
- புகை பிடிப்பதை கைவிடுதல்
- தீய மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்துதல்
- மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள்
- உங்களுக்கு மன அழுத்தம் தரும் நிகழ்வுகளிலிருந்து தள்ளி செல்லுங்கள்
- எதிர்பார்ப்பதை குறைத்திடுங்கள்
- தியானம் செய்யுங்கள்
- எந்த ஒரு நிகழ்விற்கு முன்னாலும் ஆழ்ந்து மூச்சு இழுத்துக்கொள்ளவும்
- நெகிழ்த்துதல் உடற்பயிற்சி மற்றும் யோகா மனத்தளர்விற்கு நல்லது
- மன அழுத்த காரணிகளை ஆராய்ந்து தவிர்க்க பழகுங்கள்.