Skip to content

தலை சுற்றலும் மயக்கமும்

பெனைன் பாராக்ஸிஸ்மல் பொசிஷனல் வெர்டிகோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம், பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது.  இது உண்டாகும் போது தலை சுழல்வது போல் உணர்வு வரும், உடல் நிதானத்தை இழக்கும். தலையை சற்றே வேறு திசையில் திருப்புவதன் மூலம் இது நேரலாம். அதாவது தலையை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டும் போதும், படுக்கையில் புரளும் போதும், எழுந்து அமரும் போதும் இது ஏற்படலாம்.

இதற்கு முக்கிய நான்கு காரணங்கள்:

  • காதின் உட்புறம் சமநிலை இல்லாதிருத்தல்
  • தலையில் பலமாக அல்லது சிறிய அளவில் அடிபடுதல்
  • காதின் உட்புற பாதிப்பு
  • ஒற்றை தலைவலி

தலையை சரியாக வைப்பதில் காதின் அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. காதின் அமைப்புக்கும் புவி ஈர்ப்புக்கும் மிகவும் தொடர்பு உண்டு. இந்த அமைப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது நம்மை புவி ஈர்ப்புக்கு எதிராக மாற்றி விடும். அதனால், உங்களால் சரிவர நிற்க முடியாமல் இயங்க முடியாமல் போய்விடுகிறது.

இதற்கான அறிகுறிகள்:

  • மயக்கம்
  • தலை சுற்றுவது போல் உணர்வு
  • நிலை தடுமாறுவது
  • வயிற்றுப் புரட்டல்
  • வாந்தி
  • நிற்க முடியாத நிலை
  • கண்கள் செருகுவது

இந்த அறிகுறிகள் சில நொடிகளில் இருந்து அதிக நேரமும் இருக்க வாய்ப்புள்ளது.  ஒரு சில சமயங்களில், இந்த அறிகுறிகள் அதிக நேரம் இருக்கும். அதே போல குறைந்த நேரமும் இருந்து மறைந்துவிடும்.

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?

நிறைய பேர் இந்த தலை சுற்றல் மயக்கத்தை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகளின் போது உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

  • அடிக்கடி தலை சுற்றல், மயக்கம்
  • தொடர்ந்து மயக்கம் வருவது
  • கடுமையான தலைவலி
  • காய்ச்சலுடன் மயக்கம்
  • இரட்டை பார்வை அல்லது பார்வை இழப்பு
  • காது கேளாமை
  • பேச முடியாமை
  • கை கால் அயர்வு
  • சுய நினைவை இழத்தல்
  • நடப்பதில் சிரமம் அல்லது நடக்க முடியாமை
  • உணர்ச்சி யற்ற அல்லது கூச்ச நிலை

இதற்கான சிகிச்சை:

தலை சுற்றல் மயக்கத்தை காது மூக்கு தொண்டை நிபுணரிடம் சிகிச்சை பெறுவதன் மூலம் உடனடியாக குணப்படுத்த முடியும். காதில், நமக்கு மயக்கம் உண்டாகும் பகுதியை கண்டறிந்து அங்கு தளர்வாக உள்ள படிகங்களை சரியான இடத்தில் அமர்த்தி, உடனடியாக மயக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும். சிகிச்சை முடிந்த பிறகு, பத்து நிமிடம் வரை மருத்துவர் உங்களை கண்காணித்து மீண்டும் இந்த தலைசுற்றல் வராமல் இருக்கிறதா என்பதை  உறுதிசெய்த பிறகு வீட்டிற்கு அனுப்புவர். இத்தகைய மயக்கத்திற்கு, அறுவை சிகிச்சை செய்வது என்பது எப்போதாவது மட்டுமே நடைபெறுகிறது. இந்த அறுவை சிகிச்சை, காதில் உள்ள கால்சியம் துகள்கள் அந்த இடத்தை விட்டு எப்போதுமே நகராத வண்ணம் தடுப்பதற்காக செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: