Kidney care

சிறுநீரக கற்களை தவிர்க்க சுலபமான வழிகள்

சிறுநீரக கற்கள் எப்படி உருவாகின்றன? சிறுநீரில் சிறு வடிவில் திடப்பொருளாக உருவாகக்கூடிய வாய்ப்புள்ள கால்சியம், ஆக்ஸலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதும், நமது உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அதனை கரைக்க இயலாமல் போவதனால் தான். இந்த பொருட்கள் சிறிது சிறிதாக கடினப்பட்டு, கற்களாக மாறுகின்றன. பெரும்பாலான கற்கள் தாமே வெளியேறி விடும் அல்லது கரைந்து விடும், ஆனால் சில நேரம் அவற்றை சிறு துகள்களாக உடைத்து வெளியேற்ற மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுபவர்கள் ஆவர். இதில் ஆண்கள் சுலபமாய் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கடுமையானவை. இதில் அதிகமாக வெளியில் தெரிவது முதுகிலோ, வயிற்றிலோ  அல்லது பக்கவாட்டிலோ வரும் குத்தும்  வலி. இந்த வலி இடம் மாறி கொண்டே இருக்கும்.  கற்கள் சிறுநீரகப்பாதையில் நகர்ந்துகொண்டே இருப்பதால் வலியும் அது பொறுத்தே மாறிக்கொண்டே இருக்கும் . சிறுநீரக வாய் பகுதிக்கு அந்த கல் வந்து விட்டால், சிறுநீர் கழிக்கும் போது வலியும், மிகுந்த எரிச்சலும் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டி இருக்கும், சிறுநீர் பாதை தொற்று போலவே. சிறுநீரில் இரத்தம் வருவது மற்றொரு அறிகுறி. சிலசமயம் இரத்த செல்கள் மிகச்சிறியதாக, நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சிறுநீர் பரிசோதனையில் அவை தெரிந்து விடும்.   சிறுநீர் ஒரு வித நாற்றத்தோடும், கலங்கியும் இருந்தால் கற்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு .

ஒருமுறை சிறுநீரக கற்கள் வந்துவிட்டால் , அடுத்த 10 வருடங்களுக்குள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.  மருந்துகள், உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கைமுறையில் மாற்றம், இவைகளை கடைபிடித்தால் இதனை கட்டுப்படுத்தலாம்.

 

சிறுநீரக கற்கள் வராமல் இருக்க சிறந்த, சுலபமான வழிகள்.

எப்போதும் நீர் மிகை நிலையிலே இருங்கள்

நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கும்போது உங்களுடைய சிறுநீர் நீர்த்துப்போகிறது , இதனால் சிறுநீரில் உள்ள பொருட்கள் கெட்டியாவதோ, ஒரு இடத்தில் குவிவதோ இல்லை. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறு தண்ணீருடன்  அருந்துவது நல்ல பலனைத்தரும். அதில் உள்ள சிட்ரேட் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும் .ஆனால் இதனை சர்க்கரை சேர்க்காமல் அருந்தவேண்டும். சர்க்கரையில் கற்கள் உருவாக்கும் தன்மை உள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்பவராகவோ அல்லது வியர்வை நிறைய வெளியேறுபவராகவோ இருந்தால் அந்தளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

கால்சியம் சிறுநீரக கற்கள் உருவாக காரணமானவைகளில் ஓன்றானாலும், கால்சியம் குறைவாக உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும், மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கும் காரணமாகும். கொழுப்பு குறைவான பால், சீஸ் மற்றும் தயிர் இவை எல்லாமே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளாகும். நீங்கள் கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராயிருந்தால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

 

சோடியம் குறைவாக சாப்பிடுங்கள்.

அதிக உப்புள்ள உணவு எடுத்துக்கொள்வது உங்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகமாக்கும். சிறுநீரில் காணப்படும் அதிக உப்பானது, கால்சியம் இரத்தத்தால் திரும்ப உறிந்து கொள்வதை தடுக்கும்.  பதப்படுத்தப்பட்ட , கேனில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் அதிக அளவு உப்பு கொண்டவை.  அவற்றை தவிர்க்க வேண்டும். சூப்பர்மார்க்கெட்டுகளில் பொருள்கள் வாங்கும்போது அவற்றின் மேலே ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களை படியுங்கள் பிறகு வாங்குங்கள்.  உப்புக்கு பதிலாக பசுமையான இலைகள் மற்றும் மனம் மிகுந்த துகள்கள் போன்றவற்றை சுவையூட்டிகளாக உபயோகிக்கலாம்

 

ஆக்சலேட் குறைவாக உள்ள உணவினை சாப்பிடுங்கள்.

சிறுநீரில் உள்ள கால்சியதோடு சேர்ந்து கற்களாக மாறுகிறது ஆக்சலேட். ஆகவே ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை தவிர்த்து விடுங்கள். கோதுமை தவிடு, சாக்லேட், சோயா , கடலை , கீரை மற்றும் காபி ஆகியவற்றில் அதிகளவில்  இருக்கிறது.

 

மாமிசபுரதத்தினை குறைவாக உண்ணுங்கள்

மாமிசப்புரதம் அதிக அமிலம் கொண்டது. அது உங்கள் சிறுநீரில் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

இந்த சூழல் கற்கள்  உருவாக எதுவாக அமைந்திடும். மீன், பன்றி இறைச்சி, சிக்கன் மற்றும் மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.

 

வைட்டமின் சி கூடுதல் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்

வைட்டமின் சி கூடுதல் உணவுகள் ஆண்கள் உடலில்  கற்கள் உருவாகும் சாத்தியக்கூறுகளை இரட்டிப்பாக்குகின்றன.  ஆனால் வைட்டமின் சி இயற்கையிலேயே அதிகமாயிருக்கும் உணவுப்பொருட்கள் அதுபோல் செய்வதில்லை.

 

மருந்துகள்

சில மருந்துகள் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பினை  அதிகரிக்கின்றன. ஆகவே நீங்கள் அதிக சாத்தியக்கூறு உள்ளவராக நினைத்தாலோ , உங்கள் குடும்பத்தில் நிறைய பேர்களுக்கு இருந்திருந்தாலோ, உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். அவர் உங்களுக்கு மற்ற அறிகுறிகளையும் கணக்கில் கொண்டு  கற்கள் உருவாவதை தடுக்கும் மருந்துகளை பரிந்துரைப்பார்.

சிறுநீரக கற்கள் சாதாரணமானவை தான் , அவற்றை வராமல் தடுக்க நிச்சயமான வழிகள் ஏதுமில்லை. நீர்மிகை நிலையிலே இருத்தல் , மேலே சொன்ன வழிமுறைகளை கடைபிடித்தால், அவை உருவாகும் சாத்தியக்கூறுகளை நிச்சயமாய் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: