நமது தோள்பட்டையினை பல தினசரி வேலைகளுக்கு உபயோகப்படுத்துகிறோம். ஆனால் நாம் இதைப்பற்றி நினைப்பதோ , கவனிப்பதோ இல்லை. ஆனால் தொடர்ந்த அதிக உபயோகம் பல்வேறு தோள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தசை நார் அழற்சி வர காரணங்கள் :
மூட்டு பை அழற்சி :
மசகு நீர் சுரப்பி பைகள் , இவை உடலில் தோள்பட்டை போன்ற இணைப்பு /மூட்டு பகுதிகளில் இருப்பவை. இவைதான் உராய்வினை தடுக்கும். அதிக உபயோகமானது தோள்பட்டையில் வீக்கத்தினையும், அழற்சியையும் உருவாக்கும்.
தசை நாண் அழற்சி :
தசை நாண்கள் தான் தசைகளையும் எலும்புகளையும் இணைக்கிறது. இரண்டு விதமான தசை நாண் அழற்சிகள் உள்ளன:
கடுமையானது: தோள்பட்டை மூட்டினை அதிகம் உபயோகித்தால் வருவது.
நாள்பட்டது : ஆர்த்தரைடீஸ் போன்ற சிதைவு நோயினால் வருவது.
தசை நாண் கிழிபடுதல்.
இதற்கான காரணங்கள்:
- கடுமையான காயங்கள்.
- வயதாவதால் ஏற்படும் சிதைவுகள், மூட்டுகள் உபயோகித்து செய்யப்படும் தொடர்ந்த வேலைகள், தேய்மானம்.
- கிழிபடுதல்கள் அரைகுறையானவையாக இருக்கலாம்,அல்லது எலும்பிலிருந்து தனித்து கிழிந்தே விடலாம்.
மோதுவித்தல்:
- கையினை உயர்த்தும்போது தோள் பட்டையின் மேல்புறம் அதன் கீழ்ப்பகுதியில் உள்ள மெதுவான திசுக்களின் மேல் அழுத்தம் தரும்போது நடக்கிறது.
- தோள் பட்டை முனையில் அல்லது துருத்திடும் எலும்புகள் அதன் கீழ்ப்பக்க மசகு சுரப்பிகளில் மோதி, வீக்கத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தும்.
தோள்பட்டை நழுவுதல்
- மேல் கை எலும்பின் தலைப்பகுதி , விபத்தினால் தோள் பட்டை மூட்டிலிருந்து நழுவுதல்
- தோள் பட்டை நழுவுதல் பகுதியாகவும் நடக்கலாம். பந்து கிண்ண முட்டிலிருந்து பந்து பகுதி வெளிவருதல்.
- முழுவதுமான நழுவுதல் என்பது மூட்டிலிருந்து முழுவதுமாக வெளிவருதல்.
ஆர்தரைடிஸ்
- தோள் பட்டையில் ஏற்படும் ஆர்த்தரைடீஸ் ல் முக்கியமானது ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ்
- இதன் அறிகுறிகள் வீக்கம், வலி மற்றும் விறைப்பு
- விளையாட்டுப்போட்டிகளாலும், வேலை சம்பந்தமான மற்றும் தேய்மானத்தாலும் ஏற்படும்.
எலும்பு முறிவு
- தோள் எலும்பு முறிவு தோள்பட்டை எலும்பு , மேல் தோள்பட்டை எலும்பு ,தோள் பட்டை ஆகியவற்றில் ஏற்படலாம்.
- எலும்பு முறிவு அதிக வலியினை தரும், தோளில் வீக்கம் மற்றும் வலியினை உருவாக்கும்.
வெளி மூட்டிறக்கம் ( உறைந்த தோள்பட்டை)
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் அடிபட்டவர்களுக்கு தோள் பட்டை வலி மற்றும் விறைப்பு தன்மை
- தோள்பட்டையின் அசைவுகள் வலிமிகுந்தாகவும், குறைவானதாகவும் இருக்கும்.
- மற்ற சாதாரண காரணங்கள் கட்டிகள், தொற்று மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள்
தோள்பட்டை வலிக்கு மருத்துவங்கள்
இது தோள்பட்டை வலியின் காரணம் மற்றும் தன்மையை பொறுத்தது. இதற்கு எலும்பியல் மருத்துவரின் ஆலோசனையின்படி மேற்புற மருத்துவமோ அல்லது வேலை சார்பு மருத்துவமோ செய்யப்படும். RICE தெரபி வீக்கத்திற்காக செய்யப்படும். தோள்மூட்டினை அசையாமல் வைத்திருக்க தொட்டில் கட்டோ அல்லது மாவுக்கட்டோ போடப்படும்.வலி மற்றும் வீக்கத்திற்கான மாத்திரைகள் மற்றும் பிஸியோதெரபி சிகிச்சைகள் செய்யப்படும். மிக தீவிரமான பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும்