Skip to content

இதய வீக்கம்’ என்பது ஆபத்தான நோயா?

‘ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி’ எனப்படும் இதய வீக்க நோயானது, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று; மனஅழுத்தமே, இந்நோய்க்கான அடிப்படை காரணம்! மவுன கொலையாளியான மன அழுத்தம், இதயத்தை பலவீனப்படுத்தி, பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்தவகையில், இது ஆபத்தான நோய்தான்!

மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்குவது எப்படி?
மன அழுத்தம் என்பதை, தன்னுள் நிகழும் ஒரு அசாதாரண நிலையாகத்தான் உடல் எடுத்துக் கொள்கிறது. அந்த சூழ்நிலையில், பல்வேறு ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்து, இதயத்தை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன்கள், சில நேரங்களில், இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தில் தடைகளை உண்டாக்கி விடும்; இதனால், இதயம் பலவீனம் அடையும்!

இதய வீக்க நோய்க்கும், மாரடைப்புக்கும் உள்ள வேறுபாடுகள்…?
நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், அதிகமாக வியர்த்தல், தலை சுற்றல் என, இரண்டு நோய்களுக்குமே பொதுவான அறிகுறிகள்தான்! ஆனால், மாரடைப்பு, இதயத்தின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் வருகிறது. இதயவீக்கம் என்பதோ, இதய தசைகளில் ஏற்படும் இறுக்கத்தினால், ரத்த ஓட்டம் தடைபட்டு உண்டாகிறது.

இதயம் வீங்காமல் காக்க…?
யதார்த்தத்தினை புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் மனநிலைக்கு பழக வேண்டும்; பணிச்சூழலால் ஏற்படும் மன இறுக்கத்தினை, தகர்த்து விட அறிந்திருக்க வேண்டும்! இவை எல்லாவற்றையும் விட, மருத்துவரின் ஆலோசனையும், அதை தீவிரமாக பின்பற்றும் உறுதியும், ஒழுக்கமான வாழ்வும், இதயம் வீங்காமல் நிச்சயம் காக்கும்!

மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்…
காவேரி ஹார்ட்சிட்டி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: