Skip to content

காலை உணவு உங்கள் இதயத்திற்கு நன்மை செய்யுமா?

ஒரு நாளின் முக்கிய உணவு காலை உணவு தான் என்பது நமெக்கெல்லாம் தெரிந்த உண்மைதான். ஆனால் உங்களுக்கு தெரியுமா ? நல்ல காலை உணவு உங்கள் இதயத்தை நன்றாக வைத்திருக்கும் என்பது .

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் , இதயத்திற்கு நன்மை செய்யும் விஷயங்களில் காலை உணவு தவறாமல் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அதற்கான காரணங்களையும் தந்திருக்கிறார்கள்.

காலை உணவு எப்படி இதயத்திற்கு உதவி செய்யும்?

  • காலை முதன் முதலில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு உங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் உடனடியாக செயல் பட செய்கிறது, இதயம் உட்பட, அதிகபட்ச அளவில் வேலை செய்ய வைத்திடும்.

  • காலை உணவை தவிர்ப்பது நீண்டகாலத்தில் உடல் எடையை அதிகரிக்கும் . அது இதயத்தை பாதிக்கும்

  • காலை உணவை எடுத்துக்கொள்ளும் போது இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு குறையும் .

  • காலை உணவு எடுத்துக்கொள்ளும்போது உங்கள் வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும், ஆகவே உங்கள் உடம்பு கடுமையாய் வேலை செய்து உணவை செரிக்க செய்ய வேண்டும். இந்த நிகழ்வு உங்கள் இதயத்திற்கு நல்லது.

உங்களுக்கு ஏற்ற ஆரோக்யமான காலை உணவு எது?

ஒரு ஆரோக்கியமான காலை உணவில் இவையெல்லாம் இருக்க வேண்டும்:

நார்ச்சத்து : இது கொலஸ்ட்ராலை குறைக்கும், இதயத்திற்கு நன்மை செய்வது. ஓட்ஸ் , பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது.

மெலிதான புரதம் : பருப்புகள், முட்டை மற்றும் மெலிதான இறைச்சி.

கொழுப்பு: எண்ணெய் மற்றும் வெண்ணை

இவை அனைத்தும் கலந்த காலை உணவு, உங்களை உற்சாகத்தோடு செயல்பட வைக்கும் , அந்த நாள் முழுவதற்குமான சக்தியை தரும்.இதயத்தை சரியாய் இயங்க வைக்கும்.

சில காலை உணவுகளின் பட்டியல், மேலே சொல்லப்பட்டவை அடங்கியது:

  • ஓட்ஸ் உணவு காய்கறிகளோடு

  • இட்லி மற்றும் தோசை சாம்பாருடன் , மேலே சிறிது நெய்யுடன்.

  • கோதுமை பிரெட் உடன் காய்கறிகள் போட்டு செய்த ஆம்லெட்

  • தயிருடன் பழங்கள் சேர்த்தது.

  • கோதுமை பிரெட் சான்விச் காய்கறிகள், மெலிந்த இறைச்சி மற்றும் சீஸ்

  • ரவா உப்புமா, அவல் உப்புமா, சாம்பார் மற்றும் சட்னி

மக்கள் தங்கள் காலை உணவை எடுத்துக்கொள்வதில்லை அல்லது மிகவும் குறைவாக எடுத்துக்கொள்கிறார்கள். நேரமின்மையால் செய்வதில்லை, இது தான் காரணமென்றால் உங்கள் உணவை சிறு சிறு அளவில் பிரித்துக்கொள்ளுங்கள்.

கோதுமை பிரெட் சான்விச் அல்லது ஒரு கிளாஸ் மில்க் ஷேக் சரியான தேர்வு.

ஆராய்ச்சி முடிவில் மருத்துவர்கள் சொன்ன விஷயம் , காலை உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இதய பாதிப்பிற்கு முக்கிய காரணிகளான கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசிரைட் அளவுகள் அதிகரித்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கும், உடல் எடை அதிரிகரிக்கும் அதன் மூலமும் இதய பாதிப்பு ஏற்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: