Skip to content

மார்பகப்புற்றுநோய் பற்றிய – 5 மூடநம்பிக்கைகள்:

1. மார்பகக்கட்டிகள் அசையும் தன்மையுடன் இருந்தால் அது புற்றுநோயல்ல:
ஆரம்பநிலையில் புற்றுநோய்கட்டிகள் அசையும் தன்மையுடன் இருக்கும். அவை பெரிதாக வளரும் போது உடல் உறுப்புகளுடன் ஒட்டி பிணைப்பை ஏற்படுத்துவதால் அசையும் தன்மை இருக்காது. சுயபரிசோதனை செய்யும் போது பட்டாணி முதல் கூழாங்கல் அளவிலான கட்டிகள் தென்படலாம். இவ்வாறு கட்டிகள் தெரியும் நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

2. மார்பகப்புற்றுநோயில் வலி இருக்காது:                                                                          இது முழுமையாக உண்மையில்லை. மார்பக வலி ஹார்மோன்களின் குறைபாடு மற்றும் காபின் அடங்கிய உணவுப்பொருட்களால் ஏற்படலாம். இந்த வலி வரும் போகும். புற்றுநோய்கட்டிகள் வேகமாக வளரும் நிலையில் வலியை ஏற்படுத்தும். 30 வயதுக்கு மேல் அல்லது மெனோபாஸ் ஆகும் வயதில் உள்ள பெண்களுக்கு மார்பின் ஒரு இடத்தில் மட்டும் ஏற்படும் வலி புற்றுநோயின் அறிகுறியாகும்.

3. மார்பகக்கட்டிகள் மாமோகிராமில் மார்பகத்திசுக்களின் அடர்த்தியை அதிகமாக காட்டும்:
இது தவறு . மார்பகம் கட்டிகளுடன் இருந்தாலும் மாமோகிராமில் மார்பக திசுக்கள் அடர்த்தியாக தெரிவதில்லை. ஒரு ஆய்வில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு மார்பகத்திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மார்பகத்தில் உள்ள பால்சுரப்பிகள், நாளங்கள் மற்றும் இணைப்புத்திசுக்கள் மார்பகத்தின் அடர்த்தியை நிர்ணயிக்கும். புற்றுநோயிலும் மார்பகத்திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அடர்த்தியான திசுக்கள் இருக்கும் நிலையில் 3D மாமோகிராபி எடுக்கலாம். புற்றுநோய்க்கான அதிக வாய்ப்புள்ள பெண்கள் MRI ஸ்கேன் மூலம் புற்றுநோயை உறுதி செய்யலாம்.

4. தொட்டு பரிசோதனை செய்யும் போதே புற்றுநோய்கட்டியை மருத்துவரால் உறுதி செய்ய முடியும்:
இது தவறு. மருத்துவரின் அறிவுறுத்தலின்படி புற்றுநோய்கட்டியை மாமோகிராம் மற்றும் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாமோகிராம் மற்றும் ஸ்கேன் மூலமும், 30 வயதுக்கு குறைவனோர் ஸ்கேன் மூலமும் கண்டறியலாம். மேலும் இந்த கட்டிகளை திசுப்பரிசோதனை (biopsy) செய்து புற்றுநோயை உறுதி செய்யலாம்.

5. மார்க்காம்பில் நீர் வடிதல் புற்றுநோயின் அறிகுறி:                              பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் நிறுத்திய பின் மார்பகத்தில் உள்ள பால் அல்லது அழுக்குகள் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் நீர்க்கசிவு, மார்பகத்தை அழுத்தும்போது ஏற்படலாம். ஆனால் எந்த அழுத்தமும் இல்லாமல் மார்க்காம்பில் நீர்வடிதல் அல்லது இரத்தம் வடிதல் புற்றுநோயின் அறிகுறியாகும். 10% பேருக்கு இந்த அறிகுறியுடன் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது.

புற்றுநோயை உறுதி செய்தல்:
கட்டிகள், வலி மற்றும் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து புற்றுநோயை உறுதி செய்ய முடியாது. மருத்துவப்பரிசோதனைகள் மூலமே உறுதிசெய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: