மார்பக அறுவைசிகிச்சை அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கு பின் மார்பகத்தில் அரிப்பு ஏற்படலாம்.
மார்பகத்தின் உள்ளே அரிப்பு ஏற்படுவதை புற்றுநோயின் அறிகுறி என்று கூறமுடியாது. ஆனால் மார்பகத்தில் எந்த அறிகுறி தோன்றினாலும் மருத்துவ ஆலோசனை பெற்று, அது புற்றுநோயின் அறிகுறியா என்பதை உறுதி செய்யவேண்டும்.
ஆனால் மார்பகம் சார்ந்த எந்த நோயும் இல்லாத நிலையில் தோல் வறட்சி அல்லது சிறிய அளவிலான அழற்சியினால் மார்பகத்தில் அரிப்பு ஏற்படலாம். “காபின்” அடங்கிய பொருட்களை தவிர்த்தல் மற்றும் மருந்துகள் மூலம் இதை சரி செய்யலாம்.
மார்பின் காம்பு பகுதி
* சிவத்தல்
* வெடிப்பு அல்லது புண் ஏற்படுதல்
* நீர் அல்லது சீழ் வடிதல்
* மார்பின் உள்ளே அரிப்பு ஏற்படுதல்
இவை பேஜட்ஸ் டிஸிஸ் என அழைக்கப்படும் மார்பக புற்றுநோயின் அறிகுறியாகும்.