Skip to content

குழந்தைகளின் மூளைத்திறன் உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் குறுகிய நேர திரை பயன்பாட்டுடன் தொடர்புடையதுஎன்பது உங்களுக்கு தெரியுமா?

குறைந்தபட்சம் 60 நிமிட உடற்பயிற்சி (விளையாட்டு), 9-11 மணிநேர இரவு தூக்கம் 2 மணிநேரத்திற்கு மிகாமல் (தொலைக்காட்சி, கணினி) பொழுதுபோக்கு திரை பயன்பாடு இவை மூன்றும் குழந்தைகளின் அதிக மூளை மதிப்பெண்களோடு பின்னப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் இம்மூன்று செயல்களையும் குழந்தைகளின் அதிக மூளைத்திறன் மதிப்பெண்களுக்கு முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 8 முதல் 11 வயது வரை உள்ள 4524 குழந்தைகளிடம் மொழித்திறன், நினைவாற்றல், திட்டமிடல் மற்றும் செயல்களை விரைந்து முடிவெடுக்கும் திறன் அகியவற்றை மதிப்பிட 6 வகையான சோதனைகள் நடைபெற்றது. இக்குழந்தைகளின் மதிப்பெண்ணை மேற்கூறப்பட்ட 3 காரணிகளை பின்பற்றும் குழந்தைகளின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டு பார்த்த போது 3 காரணிகளை பின்பற்றும் குழந்தைகளின் மதிப்பெண்ணானது 5% அதிகமாக இருந்தது.
மதிப்பெண் குறைவாக பெற்ற குழந்தைகளின் தூக்கம் குறைவாக இருந்ததும் அதற்கு காரணம் அவர்கள் அதிகமான நேரம் தொலைக்காட்சி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றை பொழுதுபோக்கிற்காக அதிக நேரம் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: