கோடை காலத்தில் உணவை மாற்றுங்கள்
மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். உணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர் களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம்.