Skip to content

மருதாணியின் மகத்துவம்!

1.மருதாணி இலை கண்ணுக்கு தெரியாத கிருமிகளை கூட நொடியில் அழிக்கும் சக்தி கொண்டது. நகசுத்தி வராமல் தடுக்கும், புண்களை ஆற்றவும் நல்ல மருந்து. மேலும் கை’, கால், விரல்களையும் அழகு படுத்த உதவுகிறது.

2.தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

3.கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

4.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: