சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப்படும், சுகர் ப்ரீ எனப்படும் அஸ்பார்டோம் ஆல் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால் சுகர் ப்ரீ சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், ஸ்வீட்டுகளை பிரபல கடைகளில் விற்கிறார்களே ? இது சரியானதா?
சுகர் ப்ரீ பொருட்களை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கண்டிப்பாகக் கொடுக்க கூடாது. இந்த சுகர் ப்ரீ பொருட்களில் கலோரிகள் அதிகம் உள்ளதால், மற்றவர்கள் கூட இதனை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பாலான உணவுப் பண்டங்களில், சாதாரண சர்க்கரைக்கு பதிலாக புருக்டோஸ் உபயோகிக்கப்படுகிறது. சர்க்கரை அளவு கட்டுப்படாத நிலையில் உள்ளவர்கள், புருக்டோஸ் கொண்ட தின்பண்டங்களை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு மேலும் கூடிப்போகிறது. இத்தகைய சுகர் ப்ரீ பொருட்கள் விலை, மிக அதிகமானதும் கூட. எனவே இவற்றை தவிர்த்து நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது