Skip to content

குடல் புண் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

நம்முடைய உணவில் துவர்ப்புச் சுவை குறையும்போது குடல் புண் ஏற்படும். தினசரி உணவில் துவர்ப்புச் சுவையுள்ள வாழைப்பூ, அத்திப்பிஞ்சு, கடுக்காய், வாழைத்தண்டு, மாங்கொட்டைப் பருப்பு, செம்பரத்தைப்பூ, வெந்தயம் இவற்றில் ஏதேனும் ஒன்று இடம் பெற வேண்டும். பசித்தவுடன் சாப்பிட வேண்டும். பசியை அடக்க சூடானவற்றை சாப்பிடக் கூடாது.வெப்பச் சூழலில் வேலை செய்வோர் மதியம் 11 மணியளவில் சத்துள்ள குளிர்ச்சித் தரும் மோர் கலந்த கேழ்வரகு கூழ் குடிக்கலாம். வெள்ளை முள்ளங்கி சூப்போ, முட்டைக் கோஸ் சூப்போ தினசரி குடிக்கலாம். மூலிகை கலந்த கூந்தல் தைலங்களை தினசரி தலைக்குத் தடவி வர வேண்டும். சமையலில் தாளிப்பதற்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: