Skip to content

உடல் சோர்வுக்கான டாப் 10 காரணங்கள் !!

தூக்கம் இன்மை :

பொதுவாக குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர துக்கம் அவசியம். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல் விரைவிலேயே சோர்வடையும்.

 

தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் :

இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். இவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

 

மாறுபட்ட உணவுமுறை :

காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு.

 

ரத்த சோகை :

ரத்த சோகை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக உடல் சோர்வு இருக்கும். எனவே ரத்த சோகை உள்ளவர்கள் விரைவில் மருத்துவரை பார்த்து நோயை சரிசெய்வது நல்லது.

 

மன அழுத்தம் :

வெளியே தெரியாத மன அழுத்தமே பெரும்பாலான சோர்வுக்கு காரணம்.

 

தைராய்டு ஹார்மோன் குறைபாடு :

வெளியே தெரியாத ஹோர்மோன் குறைபாடு ஒரு காரணம்.

 

கப்பைன் அதிகரித்தல் :

கொஞ்சம் கொஞ்சமாக நெறைய தடவை குடிக்கும் காபி டி போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும் .

 

நீரிழிவு நோய் :

35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

 

சிறுநீர் தொற்று :

பெண்கள் ,சிறு குழந்தைகள் – வெளியே தெரியாத தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம்

 

உடலில் நீர்,உப்பு பற்றாகுறை :

போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர்,உப்பு இழப்பு ஆகியவையும் உடல் சோர்வுக்கு காரணங்களாக அமைகின்றன. .

1 Comment »

  1. medical essential tips !!!!!!

    On Sat, Feb 10, 2018 at 1:21 PM Kauvery Hospital wrote:

    > Kauvery Hospital posted: “தூக்கம் இன்மை : பொதுவாக குழந்தைகளுக்கு எட்டு
    > முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர துக்கம்
    > அவசியம். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல் விரைவிலேயே சோர்வடையும்.
    > தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் : இந்த நிலை மிகவும் குண்டா”
    >

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: