நெய்யை தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து, உருக்கிப் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லது.
நெய்யை உருக்குவதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன.
மிதமான தீயில்தான் நெய்யை உருக்கவேண்டும். நெய், கட்டியிலிருந்து திரவ நிலைக்கு வந்த உடனே அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
உருக்கிய நெய் கொதித்தால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். நெய்யை கொதிக்க வைத்து பயன்படுத்துவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச்சமம் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதே போல் நெய்யை திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்துவதும் தவறானது.
அப்படிச் செய்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து விடும். இதனால் உடல் பருமன் பிரச்னை உருவாக வாய்ப்பு அதிகம்.
எனவே தேவையான அளவு நெய்யை மட்டும் பயன்படுத்துங்கள்.