கீரைகளை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பஃப்ஸ் செய்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.
Recipe By: பூஜா குப்தா
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 3-4 பேர்கள்
- சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2 பெரியது (தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
வெஜிடபிள் ஆயில் +brushing – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1(நறுக்கியது) மற்றும் அரையாக வெட்டிய வெங்காயம் – 1,நன்றாக நறுக்கியது – 2
இஞ்சி (தோலுரித்து மற்றும் வெட்டியது) – பெருவிரல் அளவிற்கு
பூண்டு, நசுக்கியது – 2
சிவப்பு பச்சை மிளகாய் (நன்றாக நறுக்கியது) – 1 விருப்பத்திற்கு ஏற்ப
கொத்தமல்லி தழைகள் – ஒரு கொத்து நன்றாக நறுக்கியது
கறி பேஸ்ட் (ஒரு சிறிய கடாய் தேவைப்படும்) – 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன்
கீரை – 2 கப்
பிலோ பாஸ்ட்ரி சீட் – 6 சீட்டுகள்
வெள்ளரிக்காய் – 1/2 கப்
இயற்கையான யோகார்ட் – 1 கப்
மாங்காய் சட்னி – பரிமாறுவதற்கு
- சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கிளிங் பிலிம் கொண்டு கவர் செய்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து 8 நிமிடங்கள் அதாவது மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்
அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்
இதனுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய், கொத்தமல்லி தழைகள் இவற்றையெல்லாம் சேர்த்து சில நிமிடங்கள் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
இப்பொழுது கறி பேஸ்ட், கருப்பு எள் இவற்றை போட்டு 30 விநாடிகள் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதனுடன் கீரை மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்
கீரை நன்றாக மசியும் வரை வேக வைக்கவும். பிறகு வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்க்க வேண்டும். அந்த வேக வைத்த பெளலில் இருக்கும் தண்ணீரையும் சேர்த்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கரண்டியை எடுத்து அதன் பின் பகுதியை கொண்டு எல்லாவற்றையும் நன்றாக மசிக்கவும். ஒரு சில கிழங்கு துண்டுகளை விட்டு விடவும்.
பிறகு ஆற வைக்கவும்
பாஸ்ட்ரி தயாரிக்கும் முறை :
பாஸ்ட்ரி தயாரிக்க சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவை பிசைந்து கொண்டு அதில் இருந்து கொஞ்சம் மாவை எடுத்து இரண்டு சதுர வடிவ சீட் மாதிரி மட்டும் தேய்த்து கொள்ளவும் அல்லது ரெடிமேட் ஸ்பிரிங் ரோல் சீட் வாங்கியும் பயன்படுத்தலாம். மீதுள்ள மாவு கலவை காயாமல் இருக்க ஒரு டீ டவலை கொண்டு மூடிக் கொள்ளவும்
இப்பொழுது இரண்டு சீட்களிலும் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும். ஒரு சீட்டின் மீது மட்டும் கருப்பு எள்ளை தூவி விடவும்
மற்றொரு சீட்டை எள் தூவப்பட்ட சீட்டின் மீது வைக்க வேண்டும். குறைந்த பக்க பகுதி உங்களை நோக்கி இருக்குமாறு வைத்து கொள்ளவும். இப்பொழுது அதன் நடுவில் வெட்ட நமக்கு இரண்டு நீளமான துண்டுகள் கிடைக்கும்
இப்பொழுது கிழங்கு கலவையை சீட்டை முக்கோண வடிவில் செய்து அதனுள் வலது பக்க மூலையில் வைத்து முக்கோண வடிவில் மடக்க வேண்டும்
முக்கோண வடிவம் வருகின்ற மாதிரி சீட்டை மெதுவாக மடக்க வேண்டும்
மீதமுள்ள பாஸ்ட்ரி சீட்டின் பகுதியை கத்தியை கொண்டு வெட்டி விட வேண்டும். இதே மாதிரி ஆறு சமோசாவிற்கும் செய்ய வேண்டும்.
இப்பொழுது ஓவனில் 200 செல்சியஸ் /180 செல்சியஸ், ஃபேன் /கேஸ் 6 என்ற அளவீட்டில் வைத்து சமைக்க வேண்டும்
இப்பொழுது சமோசாவை பேக்கிங் ட்ரேயில் வைத்து சமைக்க வேண்டும்
இன்னும் கொஞ்சம் எண்ணெய்யை அதன் மேல் ஊற்றி மீதமுள்ள கருப்பு எள்ளையும் அதன் மேல் தூவி விட வேண்டும்
25-30 நிமிடங்கள் அதாவது பொன்னிறமாக மாறும் வரை சமைக்க வேண்டும்
இப்பொழுது வெள்ளரிக்காயை தோலுரித்து ரிப்பன் போல் சீவ வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகள் இவற்றையெல்லாம் போட்டு பஃப்ஸ் பாஸ்ட்ரியை அலங்கரிக்கவும்
பிறகு டோலாப் க்ரீம் மற்றும் யோகார்ட் போன்றவற்றை தட்டில் வைத்து சமோசா மேல் வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழைகள் போட்டு மற்றும் மாங்காய் சட்னி போன்றவற்றுடன் பரிமாறவும்.
- 1.பூண்டு சீக்கிரமாக கருகக் கூடியது. எனவே அதை வதக்கும் போது கவனமாக செய்யவும்.
- பரிமாறும் அளவு – 1 பாஸ்ட்ரி
- கலோரிகள் – 650 கலோரிகள்
- கொழுப்பு – 13 கிராம்
- புரோட்டீன் – 17 கிராம்
- கார்போஹைட்ரேட் – 108 கிராம்
- சர்க்கரை – 36 கிராம்
- நார்ச்சத்து – 15 கிராம்