உடலின் ஆரோக்கியமே நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து காண்பிக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உடல் குறைவாக இருந்தால் தான், அழகான தோற்றமாக தெரியும். தொப்பை தள்ளி, தடிமனாக இருந்தால், நோயாளியை போன்று தான் தோற்றமளிக்கும்.
இதனால், தான் உடல் கொஞ்சம் அதிகரித்தவுடனேயே மருத்துவரை அணுகி அல்லது உடற்பயிற்சி செய்து உடலை குறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். தொப்பை என்பது ஆண்களுக்கும் இருக்கும். பெண்களுக்கும் இருக்கும். இருவருக்குமே தொப்பை அசிங்கமாகத்தான் இருக்கும்.
தொப்பையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அதில், ஒன்று தான் யோகாசனம். தினமும் யோகாசனம் செய்து வரும் பொழுது, நம்முடைய உடல் சாதாரணமான நிலைக்கு வந்துவிடும்.
சரி, உடலை குறைப்பதற்கு என்னென்ன யோகாசனங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்…
அதாவது, 3 யோகாசனங்கள் இருக்கின்றது.
- புஜங்காசனம் (நாகாசனம்)
- தனுராசனம்,
- பவன முக்தாசனம்
ஆகிய 3 ஆசனங்களும் தொப்பை குறைப்பதற்கு பயன்படுகின்றது.
இந்த யோகாசனங்களை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை வேகமாக குறைந்து விடும்.