Skip to content

பாடாய்ப்படுத்தும் முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட மிக எளிய வழி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேக் பெயின் (முதுகு வலி) பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். சிறிது நேரம் கூட அவர்களால் சேரிலோ அல்லது பயணத்திலோ உட்கார முடியாது. அந்தளவுக்கு அவர்களின் முதுகு வலியடுக்க ஆரம்பித்துவிடும்.

அதாவது, 80 சதவீத ஆண்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதாவது, உடலில் உள்ள உறுப்பில் மையப்பகுதியாக முதுகு தான் இருக்கின்றது. முதுகு வலியை போக்குவதற்கான நிறைய உடற்பயிற்சிகள், வழிமுறைகள் இருக்கின்றன.

சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு கிட்டத்தட்ட முதுகு வலி பிரச்சனைகள் வர வாய்ப்பில்லையாம். சைக்கிள் ஓட்டக்கூடிய 44 சதவீதமானவர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இல்லையாம். அதாவது, நாம் மிதிக்கக்கூடிய பெடலானது இடுப்பு மற்றும் முதுகு பகுதிகளில் உள்ள நரம்பு பகுதிகளை செயல்பட வைக்கின்றது.

இது முதுகு வலியில் இருந்து பாதுகாக்கின்றது. இதனால், வெளிநாடுகளில் எல்லாம் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றது. அதிலும், சீனாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென்ற பாதை இருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: