Eye

காண்டாக்ட் லென்சுடன் தூங்குவதால் உங்கள் கண்கள் என்னவாகும்?

நீங்கள் என்றாவது காண்டாக்ட் லென்சுடன் உறங்கி இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக மறுநாள் காண்டாக்ட் லென்ஸை கண்களில் இருந்து வெளியே எடுக்க எந்த அளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நன்கு அறிந்து இருப்பீர்கள். இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான்.

காண்டாக்ட் லென்சுடன் தூங்குவது ஒரு மிகப்பெரிய தவறாகும்.
இது கண்களை பாதிக்கும் என்று தெரியும், ஆனால் எந்த அளவுக்கு என்று தெரியுமா?
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் காண்டாக்ட் லென்சுடன் தூங்குவது கண் நோய் தொற்றுக்கு மட்டும் வழிவகுக்காது. மேலும் இது உங்கள் கருவிழி படலத்தில் எரிச்சலை அதிகரிக்கும். மேலும் தூங்குவது மட்டுமின்றி காண்டாக்ட் லென்சுடன் நீச்சல் அடிப்பது, தினந்தோறும் பயன்படுத்தும் லென்ஸ்களை மாற்றாமல் இருப்பதும் மிகப்பெரிய தவறாகும்.
காண்டாக்ட் லென்ஸ்களை பாதுகாப்பாக பயன்படுத்த மருத்துவர் கூறும் அறிவுரைகள் 
• ஒவ்வொரு முறை காண்டாக்ட் லென்ஸ்களை கையாளும் போதும் கைகளை நன்றாக சோப்பை கொண்டு கழுவவும்
• இதுவே காண்டாக்ட் லென்ஸ்களை கழுவும் பொது அதற்க்கான காண்டாக்ட் லென்ஸ் சொலுஷனை கொண்டு மட்டுமே கழுவவும்.
• காண்டாக்ட் லென்ஸ் வைத்திருக்கும் டப்பாவை பாக்டீரியா தொற்றை தடுக்க 3 அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை மாற்றவும் .
• காண்டாக்ட் லென்ஸ்களை சுத்தமான டப்பாவில் தூய்மையான சொலுஷன் கொண்டு வைக்கவும்
நோய் தொற்றின் அறிகுறிகள் 
உங்கள் பார்வை திறனில் கோளாறு, கண்ணில் நீர்வடிதல் அல்லது கண்கள் சிவந்து காணப்பட்டால் உங்கள் பார்வையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
காண்டாக்ட் லென்ஸ்களை சுழற்றிய பிறகும் கண்ணில் உறுத்தல் இருந்தால் நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது சிறந்தது, மருத்துவரை அணுகும் போது உங்கள் காண்டாக்ட் லென்ஸ்களை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: