நாம் எல்லா நேரங்களிலும் நமது குழந்தைகளை பாதுகாத்துக்கொண்டே இருக்கின்றோம். அது விளையாட்டு காயங்கள் ஆகட்டும் அல்லது தோற்று கிரிமிகளாகட்டும். குழந்தைகளை இவற்றிலிருந்து காப்பாற்ற அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் உதவ வேண்டும்.
1. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவும்.
உங்களால் முடிந்தவரை குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கவும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. தொடர்ந்து கை கழுவுவதை ஊக்குவிக்கவும்.
தொடுதல் மூலம் 80% தொற்று நோய்கள் பரவுகின்றன. எனவே குழந்தைகளை இருமல், தும்மல் மற்றும் கழிவறை சென்று வந்த பிறகு கைகளை நன்றாக கழுவுவதை ஊக்குவிக்கவும். மிதமான சுடு நீரில் சோப்பை கொண்டு கைகளை 20 வினாடிகள் கழுவுவது நோய்களை பரப்பும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அளிக்கிறது. அது மட்டுமின்றி நுரையீரல் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
3. நோய்தடுப்புகளை தவிர்க்காதீர்கள்
குழந்தைகளுக்கு போடப்படும் நோய் தடுப்பு ஊசிகளை தவறாமல் போட்டுக்கொள்ளவும்.
இது உங்கள் குழந்தைகளை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கும். உங்கள் குழந்தை வெளிநாடு செல்வதாக இருப்பின் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்பின் அனுப்பவும்.
4. தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு தேவையான அளவு தூக்கம் அவசியம்.
தூக்கத்தின் அளவு
3-5 வயது 10 முதல் 13 மணிநேரம்
6-13 வயது 9 முதல் 11 மணிநேரம்
14-17 வயது 8 முதல் 10 மணிநேரம்
சரியான அளவு தூக்கம் இல்லையெனில் நமது உடலானது சைட்டோகின்கள் எனப்படும் நோய்களுக்கு எதிராக போராடும் புரோட்டீனை உற்பத்தி செய்யும் தன்மையை இழக்கிறது.
5.ஆரோக்கியமான உணவை உட்கொள்ள ஊக்குவியுங்கள்
குழந்தைகளை அதிகப்படியான காய் மற்றும் பழங்களை உட்கொள்ள வலியுறுத்தவும். சரியான போசாக்கான உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகள் அதிகமாக நோய்யெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்