Tips

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க இதை முயற்சி செய்து பாருங்கள்.

மழைக்காலம் ஆரம்பித்து விட்ட நேரத்தில் மழை பாதிப்புகளை விட கொசுக்களை நினைத்தால் தான் பயம் அதிகம். கொசுக் கடியினால் பரவும் நோய்களின் தீவிரத்தால் மக்கள் எல்லாருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன கொசுக்கள். ஆண்டு முழுதும் உலகின் ஏதாவது ஒரு பகுதி, கொசுக்களால் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில், மலேரியாவுக்கு காரணமான ‘அனோபிலஸ்’ மற்றும் டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு மிகவும் ஆபத்தானவை. கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே எளிதாக செய்ய முடிவதால் எல்லாரும் இதனை செய்து பார்க்கலாம்.

க்ரீன் டீ பேக் : க்ரீன் டீயில் எக்கச்சக்கமான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. இவை சருமத்தில் ஏற்படும் அரிப்பு தொடர்பான பிரச்சனைகளை நிமிடத்தில் சரி செய்ய வல்லது. இதிலிருக்கும் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் antihistamine க்ரீம்களாக செயல்படும்.

தேன் : தேன் மிகச்சிறந்த ஆன்ட்டி பாக்டீரியல் ஏஜண்ட்டாக செயல்படும். அதோடு சருமம் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் தேன் உதவுகிறது. தேனை அப்படியே சருமத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து சுத்தமாக கழிவிடுங்கள். சுத்தமாக கழுவாததால் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதால் தேனை சுத்தமாக கழுவிட வேண்டும்.

கற்றாழை ஜெல் : குளிர்ச்சியான அதே சமயத்தில் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது. கொசுக்கடியினால் சருமம் சிவந்திருந்தாலோ, அல்லது வீக்கம் ஏற்ப்பட்டிருந்தாலோ கற்றாழை ஜெல் அதனை தீர்க்கும். கற்றாழை செடியின் இலையை பாதியாக நறுக்கி அதனை சருமத்தில் தேய்க்கலாம். இதனுடன் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. கடைகளில் தனியாக கற்றாழை ஜெல் கிடைக்கிறது. ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள் என்பதால் இயற்கையாக கிடைத்திடும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது தான் நல்லது.

ஐஸ் க்யூப் : பெரும்பாலும் கொசுக்கடியினால் அரிப்பு அதிகமாக ஏற்படும். அரிப்பு தொடர்வதால் சருமத்தில் எரிச்சல் அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க ஐஸ் க்யூப் பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதற்கு முன்னால் சுத்தமான தண்ணீரை மட்டுமே ப்ரீசரில் வைத்திடுங்கள். ஐஸ் க்யூப் தயாரித்த பி்றகு அதனை சுத்தமான துணியில் வைத்து கட்டி அதனை உங்கள் உங்கள் சருமத்தில் தேய்த்திடுங்கள். நேரடியாக பயன்படுத்துவதை விட இப்படிப் பயன்படுத்துவது நன்று.

சூடான நீர் : அரிப்பு அல்லது அலர்ஜி ஏற்ப்பட்டால் உங்கள் சருமம் விரைவாக வரண்டு விடும். சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பதற்காக சூடான நீரைக்கொண்டு கைகளை துடைத்தெடுக்கலாம். அதிக சூடான நீராக இல்லாமல் லேசாக வெது வெதுப்பாக இருந்தாலே போதுமானது.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான , ஆன்டி-பயோட்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

சந்தனம் : பெரும்பாலானோர் சருமப் பாதுகாப்பிற்கு அதிகம் பயன்படுத்துவது சந்தனம். கொசுக்கடியைத் தவிர வேறு எந்த பூச்சி பாதிப்பிகளினால் சருமம் பாதிக்கப்பட்டாலும் அதனை தவிர்க்க சந்தனம் பயன்படுகிறது. சந்தனத்தை தண்ணீரில் குழைத்து கொசுக்கடி ஏற்ப்பட்டிருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

கஸ்தூரி மஞ்சள் : கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இதில் ஆண்ட்டி அலர்ஜி துகள்கள் நிறையவே இருக்கின்றன. இதனை சருமத்தில் தடவுவதால் அலர்ஜி பாதிப்புகள் மிகவும் குறைந்திடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: