சில ஹாண்ட் டிரையர்கள் நோய் கிருமிகளை நீக்குவதற்கு பதிலாக பரப்புகிறது .
காய்ச்சல் மற்றும் வைரஸ்களிலிருந்து நம்மை பாதுகாக்க ஒரே வழி நமது கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதே ஆகும். அவ்வாறு உங்களால் செய்யமுடியும் எனில் தயவு செய்து பொது கழிவறைகளில் உள்ள ஹாண்ட் டிரையர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஹாண்ட் டிரையர்கள் மற்றும் வார்ம் ஏர் டிரையர்கள் (வெப்ப காற்று உலர்த்தி) போன்றவைகள் கிருமிகளை நீக்குவதற்கு பதிலாக அவற்றை பரப்புகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு சரியான தீர்வு பேப்பர் டவல் (காகித துண்டு) .
கைகளை அடிக்கடி கழுவுவதே நோய்களிலிருந்தும் கிரிமிகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும் என்று நாம் தொடர்ந்து கூறிவருகிறோம். ஆனால் ஈரமான கரங்களால் பாக்ட்டீரியாக்கள் அதிகமாக பரவும் என்பதும் நிதர்சனமான உண்மை. எனவே கைகளை கழுவுவதை போல் கைகளை உலர்த்துவதும் மிக முக்கியம்.
கைகளை உலரவைக்கும் ஜெட் ஏர் டிரையர்கள் வார்ம் ஏர் டிரையர்களை காட்டிலும் 20 மடங்கு கிருமிகளை அதிகமாகவும், பேப்பர் டவல்களை காட்டிலும் 190 மடங்கு அதிகமாக வைரஸ்களை பரவச்செய்கிறது.
ஜெட் ஏர் டிரையர்கள் 2 ½ அடி முதல் 4 அடிவரை வைரஸ்களை சிதறச்செய்கிறது. இது முகம் போன்ற பகுதிகளில் வைரஸ்களை நேரடியாகவே பரவச்செய்கிறது.
பேப்பர் டவலானது நம் கைகளில் உள்ள ஈரத்தை உலர்த்துவதோடு வைரஸ்களையும் அதிகபட்சம் சுத்தம் செய்துவிடுகிறது
கைகளை முழுவதுமாக சுத்தம் செய்ய சரியான வழி
• கைகளை தண்ணீரில் நனைத்து சோப்பை கொண்டு 20 வினாடிகள் விரல் இடுக்குகள் முதல் அனைத்து பகுதிகளிலும் தேய்த்து கழுவவும்.
• பின்னர் சோப்பின் பிசுபிசுப்பு தன்மை போகும் வரை கைகளை நன்றாக தண்ணீர் கொண்டு கழுவவும்.
• கைகளை கழுவி முடித்த பின் துணியை கொண்டோ பேப்பர் டவலை கொண்டோ கைகளை நன்றாக துடைக்கவும்.
எல்லோருக்கும் பயன்படக்கூடிய அருமையான தகவல்…