Skip to content

தண்டுவடம் குறித்த சந்தேகங்களும் அதற்க்கான விளக்கமும்

முதுகு தண்டுவடத்தில் கட்டி வந்தால் ஆபரேஷன் மூலமாக அகற்ற முடியுமா, அது புற்று நோய் கட்டியதாக இருந்தால் சிகிச்சை என்ன? 

முதுகு தண்டு வடத்தில் கட்டி இருந்தால் ஆபரேஷன் செய்து அகற்றலாம். புற்று நோய் கட்டியாக இருந்தால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதவியுடன் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி சிகிச்சை வழங்கி, ஆலோசனையின் பேரில் ஆபரேஷன் செய்ய முடியும்.

எனக்கு வயது 70. தடுமாற்றத்துடன் தான் நடக்கமுடிகிறது. தடுக்கி விழுந்தால் முதுகெலும்பில் காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளவேண்டும் என என நண்பர் கூறினார். அவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை சிக்கலானது என்றார். முதுகெலும்பு காயத்திற்கு சிகிச்சை முறை என்ன,
அது சிக்கலானதா? 

70 வயதில் எலும்பு பலகீனமாக இருக்கும். நரம்பு, தசை போன்றவை முதுகு எலும்பில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டால் கடுமையான வலி ஏற்படும். மருந்து, மாத்திரை மூலமாக குணமாக்கலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் சிமென்ட் பேஸ்ட் வைக்கலாம். இதை நுண்துளை முறையில் செய்யலாம். இதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் திறந்த நிலை ஆபரேஷன் செய்யவேண்டியிருக்கும். மனிதனிடம் உள்ள இதர எலும்புகளுக்கும், முதுகெலும்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன, அதன் முக்கியத்துவம் எத்தகையது, முதுகெலும்பு  பாதுகாப்பிற்கான அறிவுரை தேவை  அனைத்தும் ஒரே வகை எலும்பு தான். முதுகெலும்பில் நரம்பு, தண்டுவடம் இணைந்து காணப்படும். சிறு வயதில் இருந்து முதுகுதண்டை நேராக  வைத்து உட்கார பழகவேண்டும். முறையாக, சரியாக குனிந்து நிமிர பழகியிருக்கவேண்டும். உடற்பயிற்சி அவசியம்.

தியான பயிற்சி, ஆசனங்கள் செய்யும் போது முதுகெலும்பு நிமிர்ந்திருக்க வேண்டும் என சொல்கிறார்களே அது எதற்காக? 

எலும்பு டிஸ்க், நரம்புகளை, எலும்பு தேய்மானத்தை தியான பயிற்சி மூலமாக பாதுகாக்க முடியும். முதுகை நேரமாக வைத்திருந்தால் எலும்பில் தசை பகுதி சிக்காது.

எனக்கு 25 வயது. தண்டுவடத்தில் எரிச்சல் உள்ளது. இதை சாதாரணமாக விட்டுவிட்டேன். ஆனாலும் இது தொடர்கிறது. இந்த வயதில் முதுகு பிரச்னை வராது என் நண்பர்கள் சொல்கிறார்கள். என்ன செய்வது? 

25 வயதாக இருந்தாலும், 60 வயதாக இருந்தாலும் எலும்பு சவ்வு தேய்மானம், கிருமி தொற்று இருந்தால் பாதிப்பு ஏற்படும். எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: