Skip to content

உடல் எடையை குறைத்து ஆற்றலை அதிகப்படுத்த வேண்டுமா?

நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்ப்பவரா?
அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கானது.

நீங்கள் காலை  உணவை தவிர்ப்பதற்கு அனேகமாக காலையில் தாமதமாக  எழுந்திரிப்பவராக இருக்கலாம் அல்லது காலையில் உங்களுக்கு பசிக்காமல் இருக்கலாம். இல்லையேல் காலை உணவை தவிர்த்தல் உடல் எடையை குறைக்கும் என்று நீங்கள் எண்ணிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் உங்கள் நாளை காலை உணவு இல்லாமல் ஆரம்பிப்பது உகந்தது அல்ல.

நீங்கள் அடிக்கடி கேட்டு இருக்கலாம், உணவுகளிலேயே காலை உணவு தான் மிகவும் முக்கியமானது என்று.
அதற்க்கான 5 காரணங்கள் இதோ…

1. காலை உணவு சரியான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தது

நீங்கள் தினமும் தவறாமல் காலை உணவை எடுத்துக்கொள்பவர் எனில், நீங்கள் உங்கள் தினசரி உணவில் தேவையான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்களை சேர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

முழு தானிய உணவு, முட்டை, நிலக்கடலை போன்றவை சத்தான காலை உணவாகும். இவை உங்களுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின் A, B போன்றவற்றை அளிக்கிறது.

2. ஒரு சரியான காலை உணவு உங்களின் பசியை கட்டுப்பதுத்துகிறது.

காலை உணவை தவிர்த்தல் உங்களை நாள் முழுவதும் களைப்பாக இருக்கச்செய்யும். அது மட்டுமின்றி இது ஆரோக்கியமில்லாத அங்காடிகளை உட்கொள்ளத்தூண்டுவதோடு உங்களை அளவுக்கு அதிகமான மதிய மற்றும் இரவு உணவை உட்கொள்ளச்செய்யும்.

நீங்கள் நேரப்பற்றாக்குறையின் காரணமாக வேகமாக செல்வதாக இருந்தாலும் ஒரு சிறு பழம், முட்டை, தயிர் போன்றவை உட்கொள்ள அதிக நேரம் தேவைப்படாது. மேலும் இது உங்களின் பசியை மதிய உணவு வேலை வரை கடுப்படுத்தும்.

3. உங்களின் உடலிற்கு காலையில் ஆற்றல் தேவை.
சிலர் கலோரியை குறைப்பதாக எண்ணிக்கொண்டு காலை உணவை தவிர்க்கின்றனர். இது எதிர் வினையாக அமையக்கூடும். காரணம் காலை பொழுதில் உடலானது தேவையான ஆற்றலுக்காக ஏங்கும், அவற்றை உடலில் உள்ள தசை நார்களில் தேடும்.

இரவு நீண்ட நேரம் உறங்குவதால் காலை எழுந்தவுடன் போதிய அளவு ஆற்றல் உடலில் இருப்பதில்லை எனவே காலை உணவு மிகவும் அத்தியாவசியம் ஆகும்.

4. காலை உணவை தவிர்த்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

அன்றாட காலை உணவு தவிர்ப்பதால் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதற்க்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் மதிய மற்றும் இரவு உணவுகளில் அதிகப்படியான கொழுப்பை உட்கொள்வதாகும்.

காலை உணவை உட்கொள்பவர்களை காட்டிலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு 30% மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5. காலை உணவை தவிர்த்தல் உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை வெகுவாக பாதிக்கிறது.

காலை உணவானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி அதிகப்படியான கலோரிகளை கரைக்கிறது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் உடலானது தன்னை தற்காத்துக்கொள்ள அதிகப்படியான கலோரிகளை உடலில் சேர்க்க ஆரம்பிக்கிறது

காலை உணவோடு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை, சிறிய அளவிலான உணவை உட்கொள்தல் உங்களின் கொழுப்பின் அளவை கட்டுப்பதுத்துவதோடு உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
காலை உணவை தவறாமல் உண்பது அந்நாளை சரியாக ஆரம்பிக்கச்செய்யும். ஆனால் உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தேடுத்து உண்ணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: