1) மூட்டுகள் என்றால் என்ன?
206 எலும்புகள் கொண்ட மனித உடம்பு 360 மூட்டுகள் உதவியுடன் இயங்குகிறது. பெரும்பாலான மூட்டுகள் அசைந்து வேலை செய்கின்றன.இந்த அசையும் மூட்டுகளின் உதவியுடன் நாம் பல வேலைகளை செய்ய இயல்கிறது.
உதாரணமாக, உணவை மெல்வதற்கு இரு தாடை மூட்டு உதவுகிறது. ஒரு கையால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்க தோள்பட்டையிலிருந்து விரல் நுனி வரை உள்ள 32 மூட்டுகள் வேலை செய்கின்றன. இரு கால்களால் நடந்து வேலைக்கு செல்ல 62 மூட்டுகள் வேலை செய்கின்றன. குழந்தை சத்தம் கேட்டு திரும்புவதற்கு கழுத்தில் உள்ள 20 மூட்டுகள் வேலை செய்கின்றன.
2) மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது?
எவ்வாறு உங்கள் காரில் உள்ள அசையும் பகுதிகள் பிரச்சனையினால் பழுது பார்க்க / மாற்ற நேரிடுகிறதோ அதே போல் நமது மூட்டுகளுக்கும் உங்கள் உதவி அவ்வப்போது தேவைபடுகிறது. வலி 1- எலும்பு (Bone ), 2- குறுத்து (Cartilage 3)- ஜவ்வு மற்றும் ஜவ்வு நார் (Meniscus or Ligament ), 4-தசைகள் மற்றும் தசை நார்கள் (Muscles and Tendons ) 5- Synovial fluid / Bursae போன்ற பகுதிகளில் உள்ள பிரச்சனையை குறிக்கலாம்.
4) உதவி தேவைபடுவதை நாம் எவ்வாறு அறிய இயலுகிறது?
வலி என்பதே நமக்கு ஒரு அறிகுறி என்பதாகும்.
a) மூட்டில் வலி ஏற்படும் முன் சமீபத்திலோ, முன்னர் அடிபட்டு இருந்தாலோ b) பல மூட்டுகள் வலி ஏற்பட்டாலோ c) மூட்டு அடிக்கடி வீங்கினாலோ d) மூட்டு அடிக்கடி விலகினாலோ e) மூட்டில் வலியோடு நொடித்ததாலோ f ) வலியோடு சத்தம் கேட்டாலோ g) வலியால் நமது வாழ்க்கை தரம் குறைந்தாலோ (QUALITY OF LIVING)
இப்போது, கீழே உள்ள 12 கேள்விகளை படிக்கவும்:
- நீங்களாகவே ஆடையை அணிந்து கொள்கிறீர்களா?
- எந்த வித உதவியின்றி கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடிகிறதா?
- தண்ணீர் நிறைந்த டம்ளரை வாயருகே கொண்டு செல்ல முடிகிறதா?
- கடை தெருவுக்கு சென்று வர முடிகிறதா?
- எந்த வித உதவியின்றி உங்கள் உடம்பை சுத்தம் செய்து கொள்ள முடிகிறதா?
- சாதாரண கழிவறையில் அல்லது தரையில் காலை மடித்து உட்கார முடிகிறதா?
- கீழே குனிந்து துணிகளை எடுக்க முடிகிறதா?
- தண்ணீர் குழாயை திறந்து மூட முடிகிறதா?
- பேருந்து / ஆட்டோ இவைகளில் ஏறி இறங்க முடிகிறதா?
- குறைந்தது 3 கிலோ மீட்டர் நடக்க முடிகிறதா?
- காய்கறிகள் வாங்குவதற்கு செல்ல முடிகிறதா?
- மாடிப்படிகளில் ஏறி இறங்க முடிகிறதா?
ஒரு ஆணோ பெண்ணோ தனது வாழ்நாளில் இந்த 12 செயல்பாடுகளை வலி இல்லாமல் செய்ய இயலவில்லை எனில், உடல் ரீதியில் அவரின் வாழ்க்கைத்தரம் குன்றி இருப்பாதாக அறிந்து கொள்ளலாம்.
5) மூட்டு வலியை/ தேய்மானத்தை தடுக்க இயலுமா?எவ்வாறு?
நீண்ட நாள் இயங்கும் ஒரு அசையும் எந்த பொருளும் பழுதடைய வாய்ப்பு இருக்கவே செய்யும். இதை முழுமையாக நாம் தடுக்க இயலாது. என்றாலும் நாம் பின் வரும் முறைகளை பின்பற்றினால் நம் மூட்டுகளை பாதுகாக்க முடியும். இது உங்கள் கார் சர்வீஸ் விடுவதை போல் எடுத்துக் கொள்ளலாம்.
a) உடல் பருமனை குறைத்தல்/உடல் எடையை அளவாக வைத்திருத்தல் .
b) மூட்டுகளின் முழு அளவு அசைவுகளை அடிக்கடி செய்து பராமரித்தல். இதற்கு Range of Movement Exercise எனலாம்.
c) தசை மற்றும் தசை நார்களை பராமரித்தல்:
தசைகள் சுருங்கும் மற்றும் இலகுவாக விரிந்து கொடுக்கும் தன்மை உள்ளவையாகும்.இந்த இயல்பை கொண்ட மூட்டு பயிற்சிகள் Muscle Strengthening and Stretching Exercise ஆகும்.
d) உணவு மற்றும் பழக்க வழக்கங்கள்:
கிழங்கு வகைகள் உடல் பருமனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, மிதமாக கொள்ளவும், மூட்டு வலி GOUT என்ற நோயால் வந்து விட்டால் சாப்பாடு முறைகள் உங்களது எலும்பு மூட்டு மருத்துவர் அறிவுரை சொல்வார்.