Knee Pain Orthopaedic

முழங்காலில் சத்தம் ஏற்படுகிறதா?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் எல்லாரும் இதை அனுபவித்து இருப்போம் ஏழுந்து நிற்கும் போது முழங்களிலும், தலையை திருப்பும் போது கழுத்திலும், கால்கள் சுற்றும் போது  கணுக்காலில் சத்தத்தை உணர்ந்திருப்போம்.

ஆனால் இவையனைத்தும் எலும்பு முறிவு அல்லது விரிசலாக இருப்பின் சத்தம் சற்று அதிகமாகவும் வேதனையுடனும் இருக்கும்.

பலர் இத்தகைய சத்தத்தை கேட்டவுடன் தமது மூட்டுகளில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்று நினைப்பதில் ஆச்சரியம் இல்லை

இத்தகைய சத்தம் உங்களுக்கு எரிச்சலுடலாம் ஆனால் இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை

இது ஒரு பொதுவான விஷயம். ஆனால் இந்த சத்தத்துடன் வலி மற்றும் வீக்கத்துடன் இருப்பின் அது ஏதேனும் பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

தொடர்ச்சியான சத்தம் இருந்து வலியில்லை என்றால் இதனால் ஏதும் பிரச்சனை இல்லை. வலியிருப்பின் உங்கள் முழங்காலில் ஏதேனும் காயம் இருக்கலாம் அதற்கு சிகிச்சை தேவை.

 

ஏன் மூட்டுகளில் சத்தம் ஏற்படுகிறது?

பலர் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கலாம். நாம் வயது ஆக ஆக மூட்டுகளில் உள்ள சவ்வின் தன்மை சிறிது கடினமாகி எலும்புகளின்  இயக்கத்தின் போது அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தலாம்.

நீங்கள் நிற்கும் போது, அமரும்போது  மற்றும் உட்காரும்போது உடலை நீங்கள் ஏந்த நிலையில் கையாளுகிறீர்கள் என்பதை பொறுத்து மூட்டுகளில் சத்தம் வரலாம், போகலாம்.

 

ஏன் சத்தம்?

உங்கள் மூட்டுகளில் இது போன்ற ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமான எடையை தூக்கும் போது இத்தகைய சத்தத்தை உணரலாம். பெரும்பாலும் இதற்கு காரணம் உங்கள் சதை இறுக்கமா இருப்பதாகும். இந்த சத்தம் உங்கள் தசை நார்கள் எலும்பில் உறாய்வதனால் ஏற்படலாம்.

நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளை மெதுவாக செய்வதன் மூலம் இந்த சத்தத்தை குறைக்கலாம் அல்லது காணாமல் போக செய்யும்.

 

தவிர்க்கும் வழிகள்?

இத்தகைய சத்தத்தை தவிர்க்க நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அல்லது நடைபயிற்சியோ, விளையாட்டு போன்ற செயல்களில் உடலில் அதிகப்படியான திரவம் உற்பத்தி செய்ய உதவும். இந்த திரவமானது உங்கள் மூட்டுகளில் உள்ள சவ்விற்கு வழு சேர்க்கும்.

________________________________________________

காவேரி மருத்துவமனை 

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்

One comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: