முழங்கால், கட்டைவிரல் மற்றும் கழுத்து வலிகளுக்கான அறிவுரைகள்.
அடிக்கடி SMS, Whatsapp, Mail, போன்ற பல்வேறு தகவல்கள் உங்கள் ஸ்மார்ட் போன்னுக்கு மிகவும் இணக்கமாக இருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து உங்கள் ஸ்மார்ட் போன்னுடன் இணைப்பில் இருந்தால் உங்களின் உடலில் சில பாதிப்புகள் உண்டாகும்.
காவேரி எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடிக்கடி காணும் இத்தகைய பாதிப்புகள் அதிகப்படியாக செல்போன்னை பயன்படுத்துவதால் ஏற்படுவதாகும்.
இத்தகைய காயங்களை போக்க நமது மருத்துவ நிபுணர்கள் கூறும் அறிவுரைகள் :
- செல்போன் முழங்கை :
நீங்கள் அதிக நேரம் உங்கள் செல்போனில் உரையாட கூடியவர் எனில் உங்களுக்கு விலாவின் உட்பகுதி நோய் எனப்படும் (Cubital tunnel syndrome) எனும் செல்போன் முழங்கை பிரச்சனை ஏற்படலாம்.
- கட்டைவிரல் குறுஞ்செய்தி :
அதிகமாக குறுஞ்செய்திகளை வேகமாக தட்டச்சு செய்யும் போது நமது விரல்களில் கட்டை விரல் தான் அதிகமாகவும் வேகமாகவும் செயல்படும், ஆனால் கட்டைவிரலானது அதிகமாக வலையும் தன்மை கொண்டதுஅல்ல.
அதிகமாக செல்போனில் தட்டச்சு செய்யும் போது உங்கள் விரலில் உள்ள தசை நார்கள் கிழிவதற்கு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
மாற்றுவழி : உங்கள் கட்டைவிரலுக்கு பதிலாக ஆள்காட்டி விரலை தட்டச்சு செயலுக்கு பயன்படுத்தலாம் இதனால் நீங்கள் தட்டச்சு செய்யும் வேகம் குறையலாம் ஆனால் கட்டைவிரலுக்கு சிறிது இடைவெளி கிடைக்கும்.
தட்டச்சு செய்வதற்கு பதிலாக குரல் வழி செய்திகள் நாம் அனுப்பலாம்
- கழுத்து, முதுகு மற்றும் தோல் பட்டை வலி
எல்லா நேரங்களிலும் உங்களது செல்போனை குனிந்து பார்த்துக் கொண்டு இருந்தால் உங்களின் கழுத்து முதுகு மற்றும் தோள்பட்டைகளில் தசையில் பிடிப்பு, விறைப்பு ஏற்படலாம்.
சில ஆராய்ச்சிகளில் இதனால் சிறு வயதிலேயே மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகும் என்கின்றது.
உங்கள் உடலில் கவனம் செலுத்தவும்.
உங்களுக்கு மேற்கண்ட ஏதேனும் வலிகள் ஏற்படின் உடனடியாக நீங்கள் செல்போன் பயன்படுத்தும் முறையை மாற்றவும் அல்லது குறைக்கவோ செய்யும்.
உங்களின் இந்த வலியில் நீங்கள் சந்தேகம் கொண்டால் கிழ்கண்ட முதலுதவியை பின்பற்றவும்.
* ஓய்வு : செல்போன் பயன்படுத்துவதால் உங்களின் உடலில் எந்த பகுதியில் வழியேற்படுகிறதோ அந்த பகுதிக்கு சிறிது ஓய்வு கொடுக்கவும்.
* ஐஸ்கட்டி : செல்போன் பயன்பட்டால் முழங்கை,கழுத்து மற்றும் விரலில் எங்கேனும் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.
* உடல்பாகங்களில் ஏதேனும் அசவ்கரியமாக உணர்ந்தால் உடனடியாக சிறிய தலையணை ஆதரவாக பயன்படுத்தவும்.
* வீக்கம் ஏற்பட்டால் அந்த பகுதியை இருதய உயரத்திற்கு மேலே தூக்குவதன் மூலம் வீக்கத்தை குறைக்கும்.
மேற்கண்ட முதலுதவிகள் செய்தும் தொடர்ந்து வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.
அவர் உங்களுக்கு மருந்தையோ அல்லது உடற்பயிற்சியையோ பரிந்துரைக்கலாம்.
______________________________________
காவேரி மருத்துவமனை
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்
Nanrai Arumai Yala thagaval