எந்த உணவு எந்த காலத்தில் உண்ண வேண்டும் என்று தெரிந்தால் உங்கள் ஆரோக்கியம் என்றும் சூப்பர்தான்!!
எந்த காலத்திற்கு எந்த வகையான உணவை சாப்பிட வெண்டும் என்று இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.
இடம் பொருள் ஏவல் என்பது நமது குணத்திற்கு மட்டுமல்ல, நாம் உண்ணும் உணவிற்கும் பொருந்தும். கால்த்திற்கு தகுந்தாற்போல் இயற்கை பழங்களையும், காய்களையும் விளைவிக்கின்றது.
அவற்றை அந்தந்த காலங்களில் உண்பதே சிறப்பு. சில காய்களை வெயில் காலத்தில் உண்பதால் அதிகப்படியான சூடு, வாயு என பிரச்சனைகளை கொண்டு சேர்க்கும்.
அதுபோலவே குளிர்காலத்திலும் குளிர்தன்மையான காய்களை உண்பதால் வாதம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
வெயில் கால உணவுகள்: வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை எப்போதும் சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கள் சாப்பிடுங்கள். பூசணிக்காய், முருங்கை, வெள்ளரிக்காய், சுரைக்காய் உங்கள் உடலை குளிர்ச்சி படுத்தும்.
வெயில் காலத்தில் சற்று தவிர்க்க வேண்டிய உணவுகள் : கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். பயிறு, ராகி, அதிக மைதா உணவுகள், எள்ளு, வேர்க்கடலை பருப்பு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பிரட், பிஸ்கட் சாப்பிடக் கூடாது.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்தது. மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்: சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது. வேர்க்கடலை குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்: குளிர் காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
குளிர்காலத்தில் சற்று தவிர்க்க வேண்டியவை: குளிர்ச்சி தரக் கூடிய பூசணிக்காய், வெள்ளரிக்காயை, தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுதல் தவிர்க்க வேண்டும். இவை உடலை மேலும் குளிர்ச்சிபடுத்தும். அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் கொழுப்புள்ள பால் கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவுகள் சூட்டை தந்தாலும் அஜீரணத்தை உண்டாக்கும். அதுபோல் அதிக நீர்சத்து நிறைந்த காய் மற்றும் பழங்களை தவிர்க்கலாம்.