தினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையால் பல தீவிர உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. உடலுழைப்பு இருந்தால் தான், உடலின் ஒட்டுமொத்த உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் அதிகரித்து, உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடலினுள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழி.
பலர் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று கூறுவார்கள். ஆனால் கடுமையான உடற்பயிற்சியால் தான் உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பதில்லை. லேசான 15 நிமிட வாக்கிங் பயிற்சியே ஒருவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமானது.
ஆய்வுகள்உலகின் பல பல்கலைகழங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒருவர் ஒரு நாளில் 15 நிமிட வாக்கிங் பயிற்சியை மேற்கொண்டாலே, உடலினுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வு விளையாட்டு மருத்துவம் என்னும் பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றில் 15 நிமிட நடைப்பயிற்சி குறித்த ஆய்வு ஒன்று வெளிவந்தது.
அந்த ஆய்வில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில் தினமும் 15 நிமிட வாக்கிங் பயிற்சியை மேற்கொண்டவர்களுக்கு, உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு ஏற்படும் அபாயம் 22% குறைவாக இருப்பது தெரிய வந்தது.
தினமும்15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
நன்மை #1 சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ளுங்கள். அதிலும் 15 நிமிட வாக்கிங் சர்க்கரை நோயைத் தடுக்கும்.
நன்மை #2 உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
நன்மை #3 தினமும் அதிகாலையில் 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கலாம்.
நன்மை #4 குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்க 15 நிமிட வாக்கிங் பயிற்சி உதவும்.
நன்மை #5 தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
நன்மை #6 முக்கியமாக மன அழுத்தம் ஏற்படாமல், மனநிலை சிறப்பாக இருக்க 15 நிமிட நடைப்பயிற்சி உதவியாக இருக்கும்.