General Information Uncategorized

இளம் வயதிலேயே இளமையைப் பறிக்கும் சில பழக்கங்கள்

இதில் எதாவது 2 செயல்களை செய்தாலும், உங்கள் இளமைப் பறிப்போகும் என்பது தெரியுமா?

இங்கு இளம் வயதிலேயே இளமையைப் பறிக்கும் சில பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நம் அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஒருசில பழக்கவழக்கங்களால், இளமையை தக்க வைக்க முடிவதில்லை. சொல்லப்போனால், நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்வோம். அவற்றில் சில நம் அழகை மேம்படுத்த உதவினாலும், இன்னும் சில நம் இளமையைப் பாதிப்பதாகவே உள்ளது. இங்கு  இளம் வயதிலேயே இளமையைப் பறிக்கும் சில பழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது.

அதைப் படித்து அப்பழக்கங்களைத் தவிர்த்தால், நிச்சயம் நீண்ட நாட்கள் இளமையுடன் திகழலாம்.

அளவுக்கு அதிகமான உடலுறவு உடலுறவு கொள்வதால், மன இறுக்கம் குறைந்து, மனநிலை மேம்படும் தான். ஆனால் அளவுக்கு அதிகமானால், அதுவே ஆரோக்கியமற்றதாகிவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. சொன்னால் நம்பமாட்டீர்கள், அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடும் போது, அது வழுக்கைத் தலை, பார்வை பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.

சுடுகாடு சுடுகாட்டிற்கு அருகே தங்கியிருந்தால், உடனே வீட்டை மாற்றுங்கள். ஏனெனில் இந்த மாதிரியான பகுதிகளில் வசித்தால், அங்குள்ள அசுத்தக் காற்று ஆயுளைக் குறைக்கும்.

 

குளிர்பானங்கள் தாகம் எடுக்கும் போது, குளிர்பானங்கள் அல்லது சோடா பானங்களைக் குடிப்பது மிகவும் கெட்ட பழக்கம். இதற்கு மாற்றாக நீரைப் பருகுங்கள். அதிலும் தாகம் எடுக்கும் போது, எவ்வளவு நீரைக் குடிக்க தோன்றுகிறதோ அவ்வளவு நீரைக் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

 

கவலைக் கொள்வது அதிகமாக கவலைக் கொள்வதால், உடல் மற்றும் மூளை தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும். மேலும் இது முதுமை செயல்பாட்டை வேகப்படுத்தும். எனவே கவலையில் முடங்கி கிடப்பதை விட்டு, எப்போதும் சந்தோஷமாகவும், புன்னகையுடனும் இருக்கப் பழகுங்கள்.

 

தாமதமாக தூங்குவது தினமும் 7-8 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரத் தூக்கத்தை மேற்கொண்டால், அது முதுமை செயல்பாட்டைத் தடுக்கும். ஆனால் இக்காலத்தில் பலரும் இரவில் தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுந்து, அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்கின்றனர். இப்படியே இருந்தால், அது விரைவில் சருமத்தில் சுருக்கங்களை வரச் செய்துவிடும்.

 

புகைப்பிடித்தல் புகை, மது போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள டாக்ஸின்கள் சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரித்து, முகப் பொலிவை இழக்கச் செய்துவிடும். எனவே இப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுங்கள்.

 

வைட்டமின் சி தினமும் போதிய அளவில் வைட்டமின் சி எடுத்தால், சருமத்தில் சுருக்கங்கள் வரும் வாய்ப்பு குறையும். இத்தகைய வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா, கிவி போன்றவற்றில் உள்ளது. ஆகவே இளமையைத் தக்க வைக்க நினைத்தால், இப்பழங்களை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வாருங்கள்.

 

முதுமையைத் தடுக்கும் மாஸ்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு, வாரத்திற்கு மூன்று முறை ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமம் எப்போதும் பொலிவோடு இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: